பக்கம்:அறுந்த தந்தி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 அறந்த தந்தி

உன் அதிகாரத்தையும் நியாயத்தையும் காட்டு. இந்தப் பக் கம் எட்டிப் பார்த்தாயோ...' என்ருர் ரிஷபதேவர்.

நோன் பட்சிராஜா என்ற மரியாதைகூட இல்லை. என்ன துணிச்சல் உனக்கு? சீ புழுக்கை!' என்று உத்தண் டமாகப் பேசிக் காறித் துப்பினர் கருடஸ்வாமி.

அவர்கள் திருவாக்கிலிருந்து வந்த வார்த்தைகளை அப்படியே சொல்ல எனக்குத் திராணி இல்லை. அவ்வள வையும் சொல்ல முடியவும் முடியாது. நான் தேவலோகத் தில் வாழ்ந்தது போதும். என்னுல் பிரம்மதேவருக்கு இகழ்ச்சி வந்ததும் போதும். உன்னுடைய கருன்ே எனக்கு இருக்குமென்று துணிந்து முறையிட வந்தேன். என்னைப் பழித்தது பெரிதல்ல; சிருஷ்டி கர்த்தாவையே பழித்தார்கள்; அதற்குமேல் பெண்குலத்தையே பழித்தார் கள். எனக்கு அருள்க, தாயே!

来源 肇 泰

இந்த விவரத்தைச் சொல்லிவிட்டு மீட்டும் விக்கி விக்கி அழத் தொடங்கியது ஓதிம அரசு. தேவி மனம் கனிந்து, "ஹம்ஸ் ராஜாவே, எதற்காக இப்படித் துக்கிக் .கிருய்? இதெல்லாம் என்னுடைய திருவிளையாட்டென்று எண்ணிச் சந்தோஷப்படு. அவர்கள் சொன்ன வார்த்தை .களுக்கு நீ பதில் சொல்லாமல் பணிந்து வர்தாயே, அதை ம்ெச்சுகிறேன். உன்னுடைய துக்கத்தை மாற்ற வழி தேடுகிறேன். நீ கவலைப்படாதே. நீ போய் வழக்கம் போல் உன் கடமையைச் செய்துகொண்டிரு. அகங்காரத் துக்குக் கைலாசம் இடம் கொடாது. இந்த எல்லைக் குள் அகங்காரத்தை அடைத்தவர்கள் யாராணு,லும் கண் ட்னே பெறுவார்கள். நீ எல்லாவற்றையும் மறந்துவிடு' என்று அருள் செய்து ஹம்ஸத்துக்கு விடை கொடுத்து அனுப்பினுள் அகிலாண்ட நாயகி. - ஹம்ஸம் அம்பிகையின் குழலொலி போன்ற அந்த மதுர வார்த்தைகளால் காபம் ஆறிச் சத்திய லோகத்தை அடைந்தது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/103&oldid=535342" இலிருந்து மீள்விக்கப்பட்டது