பக்கம்:அறுந்த தந்தி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. - அறுந்த தந்தி

டிருந்தான். சங்கீத சம்பந்தமான சர்ச்சைகளிலே அவ லுக்கு அபாரமான ருசி. சங்கீத வித்துவான்களின் பாட் டிலேதோஷம் காண்பதில் புலி.

ராமபத்திர சர்மா மயிலாப்பூரில் ஜாகை வைத்துக் கொண்டிருந்தார். பட்டணத்தில் வசித்து வந்த தம் குரு நாதரை வாரத்துக்கு இரண்டு தடவையாவது போய்ப் பார்த்துவிட்டு வருவார். ஏதாவது புதிய கீர்த்தனத்தை இயற்றினல் முதல் முதலில் அதை விணையிலே அமைத் இப் பாடிவிட்டு நேரே தம் குருவினிடம் சென்று அாங் கேற்றுவார். அவரோ, சொல்ல வேண்டியதில்லை; ஒவ் வொரு வார்த்தையையும், ஸ்வாஸ்தானத்தையும் கேட்டுக் கேட்டு ஆனந்தக் கூத்தாடுவார். 'ராமபத்திரா, அந்தக் காலத்தைப்போல இப்போது மகாராஜாக்கள் இருந்தால் உனக்குக் கனகாபிஷேகமல்லவா செய்வார்கள்? அடடா! என்ன அருமையாக அந்தப் பதம் விழுந்திருக்கிறது! தாளத்தோடு இசைவாத அந்தப் பிராசம் காதிலே படும் போது, சங்கீதம் பெரிதா, சாகித்தியம் பெரிதா என்ற சந்தேகம் அல்லவா வந்துவிடுகிறது? தமிழ் மொழியின் பெருமை'இந்த உருப்படிகளிலே எவ்வளவு தெளிவாகக் தெரிகிறது? அந்தச் சாணத்துக்கும் பல்லவிக்கும் உள்ள பொருத்தம் ஒன்றே போதுமே, உன்னுடைய சாகித்திய சக்தியை அள்ப்பதற்கு' என்று பாராட்டுவார். 6. எல்லாம் அவ்விடத்தில் இட்ட பிச்சை; தாங்கள் செய்த அநுக்கிாக விசேஷங்தான் எனக்கு உற்சாகத்தை உண்டாக்குகிறது’ என்ற பணிவான விடை, அங்கக் கிழ வரிடமிருந்து பின்னும் அதிகமான பாராட்டை வருவிக்கும். :அந்தக் காலத்தில் - உனக்குத் தெரியாது. நீ வருவ தற்கு முன் நடந்த சமாசாரம் - அப்போது யாரோ ஒரு தமிழ் வித்துவான் வத்தான். தியாகராஜ ஸ்வாமிகள் கீர்த்த னம் பாடியிருக்கிறேனென்று சொன்னன். எனக்கு வேடிக் கையாக இருந்தது. தேவுரு நாமம் பாடியிருக்கிறேன், சாமா சாஸ்திரிகள் பாடியிருக்கிறேன் என்றெல்லாம் பிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/11&oldid=535251" இலிருந்து மீள்விக்கப்பட்டது