பக்கம்:அறுந்த தந்தி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 . அறுந்த தந்தி

என்று சிரஞ்சீவி மனிதன் கிந்தனை செய்தான். அன்று முதல் அவன் மெளனமாக இருக்கத் தொடங்கின்ை. அவனத் தரிசிக்க வந்தவர்களுக்குப் பின்னும் அவனிடம் பக்தி முதிர்ந்தது. அவனேக் கோயில் விக்கிரகம் போலவே நினைத்து வழிபாடு புரியலாயினர்.

வன் மெளனமாக இருந்தாலும் அவன் உள்ளத் தின் கொந்தளிப்பு மிகுதியாயிற்று. முன்பு அவன் வாழ்வை வேண்டித் தவம் புரிந்தான். இப்பொழுதோ-?

G

முந்நூறு வருஷங்கள் நிரம்பின. அவன் தவம் பலித் தது; கடவுள் தரிசனம் கிடைத்தது. ‘இனி எனக்குச் சாகும் வரம் வேண்டும். அப்பனே, என் ஆருயிரே, எனக்கு மரணப்பிச்சை தா. போதும் உலக வாழ்வு. சாவிலே உண்டாகும் இன்பத்தைத்தான் நான் வேண்டு கிறேன். அடுத்த பிறவி எனக்கு உண்டென்ருல் அற்பா யுசிலே கான் இறந்துவிட வேண்டும். என் அப்பனே, பக்த பாதினனே, தீன தயாளுவாகிய உன்னிடத்தில் நான் இாக்கின்றேன். எனக்கு இறந்துபோகும் பாக்கி யத்தை இந்த சஷ்ணத்திலே அருள் செய். வாழ்வு என்ற பெயரோடு எனக்குக் கிடைத்த சித்திாவதை போதும். இனி மாணம் என்னும் அமிர்தந்தான் எனக்கு வேண்டும். எனக்கு அதைத் தா!' என்று அவன் கதறினன்.

'என்னப்பா, அதற்குள் சலித்துப் போய்விட்டாயே! முந்நூறு வருஷங்களே ஆகியிருக்கின்றன ; இன்னும் எழு நூறு வருஷகாலம் இருக்கிறதே. நீ பதினுயிர வருஷம் வாழவேண்டுமென்று முதலில் வரம் கேட்டாயே!” .

பகவானே, அநாத கூகா, தீன பங்கோ, உன் லுடைய மாயா லீலைகளைக் காட்டுவதற்கு இந்தப் பேதை ஆளல்ல. பதினுயிர வருஷம் வேண்டுமென்று கேட்ட என் நாவைத் துண்டு துண்டாக வெட்டிப் போட உத்தரவாகட்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/143&oldid=535382" இலிருந்து மீள்விக்கப்பட்டது