பக்கம்:அறுந்த தந்தி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகும் வரம் X- 137

ம்ெ. கான் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்கிறேன். இனி ஒரு கணமும் உலக வாழ்வு வேண்டாம். இந்த கணத்தி லேயே சான் மாணத்தைத் தழுவிக்கொள்ளச் சித்தனுக இருக்கிறேன்.”

'ஏன், உலகத்தில் உனக்கு என்ன குறை? உனக்குக் கோயில் கட்டியிருக்கிருர்கள். தெய்வத்தைப்போல உன்னே வழிபடுகிருர்கள். தெய்வ பூஜையை மறந்தாலும் மறப்பார்கள் ; உன் பூஜையை மனிதர்கள் மறவாமல் எவ் வளவு உற்சாகமாகப் பயபக்தியோடு கொண்டாடுகிருர் கள்!' என்று மக்தகாசத்தோடு வைகுண்டநாதன் சொன்னன்.

போதுமே இந்த வாழ்வு! தெய்வங்களெல்லாம் கல் லாகவும் செம்பாகவும் இருப்பதனுல்தான் கோயில் சிறைக்குள் அடைபட்டு இந்தப் பூஜைகளை ஏற்றுக் கொள்கிரு.ர்கள். என்னேயும் உணர்வற்ற கல்லாகச் சமைத்துவிட்டால் நானும் ஒருகால் ஏற்றுக்கொள்வேன். அதெல்லாம் இருக்கட்டும். நான் கதறுகிறேன். கண்ணு, மணிவண்ணு, என்னே க் காப்பாற்ற வேண்டும். நான் முன்னே தவம் செய்தது பொய் ; இப்போது செய்வது தான் மெய். முன்னே வாங்கேட்டது பைத்தியக்காரத் தனம்; இப்பொழுது கேட்கும் வாக் தான் என் மனப் பூர்வமாக யாசிப்பது. எனக்குச் சாகும் வாத்தை உடனே

'தந்தருள். இனி ஒரு கணமும் கரியேன்."

அவனுடைய பிாலாபத்தைக் காதில் வாங்கிக்கொள் ளாமல் கமலக்கண்ணன் மறைக் தான். இங்தத் தடவை அவன் சிாஞ்சீவி மனிதனுக்கு ஒன்றுமே கூருமல் போய் விட்டான். "ஐயோ! இனி யாரைத் தேடிச் சரணடை வேன்! மரணத்தை யாரிடம் பெறுவேன்! யமதர்மராஜனே நோக்கித் தவம் புரியலாமா?-ஆம். அதுதான் வழி’ என்று சிக்தித்தான். தென்திசைக் கடவுளைத் தியானம் செய்யலான்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/144&oldid=535383" இலிருந்து மீள்விக்கப்பட்டது