பக்கம்:அறுந்த தந்தி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 அறுந்த தந்தி

பேச்சை அம்பலத்துக்குக் கொண்டு வரும்போது கொஞ்ச ஈஞ்சம் இருந்த தைரியமும் அந்தச் சிறு குழந்தையினி டமிருந்து விடை பெற்றுக்கொள்ளும்.

விதியில் நாலு பிள்ளைகளுக்கு முன் அவமானம் அடைவதைவிட வீட்டில் உதைபட்டாலும் குற்ற மில்லை என்று தோன்றிவிட்டது, மாணிக்கத்துக்கு. அதனுல்தான் தினந்தோறும் அம்மாவிடமும் சமயம் வந்த போது அப்பாவிடமும் பந்து பந்து' என்று கெஞ்சியும் அழுதும் வீம்பு பிடித்தும் கேட்டு வந்தான்.

'அம்மா, கம்ம அப்பா, காசு செலவழிக்காத கருமி பின்னு அவுங்க வீட்டிலே சொல்லிக்கிருங்களாம்' என்று கூட ஒரு நாள் தன் அம்மாவிடம் சொன்னன். அது அவள் ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டது. அன்று முதலி யார் ஆபீவலிலிருந்து வந்ததும், "கொழந்தைக்கு ஒரு காலணுப் பந்து வாங்கியாற வக்கில்லை. ஊரெல்லாம் கருமியின்னு சொல்லும்படி வச்சுக்கிறது நல்லால்லை' என்று கூறிவிட்டு, முதலியாருடைய கைப்பலத்தைக் குழந்தையோடு தானும் உணர்ந்தாள், அந்தப்பேதை மாது.

2

இவ்வளவு தூரம் பூர்வ கதை கடந்திருக்க, அன்று ஆபீவலிலிருந்து வந்தவுடன் பங்தைத் தூக்கிக் கொடுத் கால்? பெரியவராக இருந்தால் மூர்ச்சை போட்டிருக்கும். பையன் குழந்தை தானே? வாங்கிக்கொண்டு என்றும் இல் லாத குதூகலத்தோடு ஒடிஞ்ன். அதோடு மற்ருெரு விஷ யமும் சேர்ந்துகொண்டது. நாலு நாளாகப் பக்கத்து வீட்டு வேலன் பந்து கொண்டு வருகிறதில்லை. அது எங் கேயோ கெட்டுப் போய்விட்டதாம். தினந்தோறும் அவன் கையிலே பந்தைப் பார்த்தால், நமக்கு இல்லையே என்று எங்கும் மாணிக்கத்துக்கு இன்று இாட்டிப்புச் சங் தோஷம். பழிக்குப் பழி வாங்குவ்து ப்ோன்ற உணர்ச்சி வேறு, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/155&oldid=535394" இலிருந்து மீள்விக்கப்பட்டது