பக்கம்:அறுந்த தந்தி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதையும் கத்திரிக்காயும் 163

மைக்கு அழகியான பெண்மணி ஒருத்தி கிடைக்கப் போகிருள்' என்ற ஆசை ஒன்றே அவன்ச் சிறிதும் கவ. லேப்படாமல் வைத்தது. அழகி எங்கேயிருந்து வரு வாள் ? எப்படி வருவாள்?’ என்பதைப்பற்றி எல்லாம் அந்த அறிவிலி யோசிக்கவில்லை. ஒரே குருட்டுப் போக் காக மகிஷவாகனங்களை முடுக்கிக்கொண்டும், இடை யிடையே ஆகாாப் பொருள்களை விழுங்கிக்கொண்டும், அங்கங்கே கிடைத்த பழத்தையும் சிற்றுண்டியையும் விலை கொடுத்து வாங்கிக்கொண்டும் அவன் தன் உல்லாஸ் யாத்திரையை கடத்தினன். எருமைக் கடாக்களுக்கும் குறைவில்லாமல் வேண்டிய தினி வாங்கிவைத்தும், மர்லே நோங்களில் அவிழ்த்துவிட்டும் பாதுகாத்தான்.

சில நாட்கள் ஆயின. அளகேசனுடைய நாட்டைத் தாண்டி வேறு தேசத்துக்குப் போய்விட்டான். நல்ல அழ கான வடிவங்கொண்ட அவனப் பார்த்தவர்கள் யாவரும் மயங்கினர்கள்; ஆனல் அவன் எருமைக்கடா வண்டியை ஒட்டிச் செல்வது பொருத்தமாகத் தோன்றவில்லை.

'இந்தச் சுந்தர புருஷனப் பார்த்தால் யாரோ ராஜ குமாரன் மாதிரி இருக்கிறது : ராஜ களை வடிகிறது. இவன் முகத்தில். இவன் பஞ்சகல்யாணிக் குதிரையில் ஏறப் பிறந்தவன்; இந்த எருமை வண்டியில் வருகிருனே! என்ன தோஷமோ! யார் செய்த வினேயே மாற்ருந்தாய் செய்த வஞ்சனேயோ!' என்று ஜனங்கள் எண்ணினர்கள். கூட்டம் கூட்டமாக வந்து அவனேப் பார்த்தார்கள். பலர் பழம், பால் முதலிய பண்டங்களைக் கொண்டுவந்து தங் தார்கள். - ... - " - .

சாஜகுமாரன் தன் தகப்பனுர் சொன்ன உபதேசங் களேக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண் டிருந்தான். யாரிட மும் அதிகமாகப் பேசவில்லை, சிவநாமத்தை மாத்திரம் உச்சரித்துக்கொண் டிருந்தான். அவனே அணுகினவர்க ளெல்லாம் அவன் அடிக்கடி சிவகாமத்தை உச்சரிப்பதை யும் திருநீற்றைப் பூசுவதையும் கண்டு, இவன் பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/170&oldid=535409" இலிருந்து மீள்விக்கப்பட்டது