பக்கம்:அறுந்த தந்தி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருத புண்

1

“:34 ஐயோ!' என்று அலறிக்கொண்டு வந்தான் அவன். கையில் எடுத்து வந்த குழந்தை வில் விலென்று கத்திக்கொண் டிருந்தது. அதன் கால் புண்ணி விருத்து ரத்தம் பெருகி வந்தது. நான் அந்தக் காட்சியைப் பார்த்தேன். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

"எண்டா இப்படிக் கத்துகிருய்? இந்தக் குழந்தை யின் தாய் எங்கே?' என்று கேட்டேன்.

தினந்தோறும் அவள்தான் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கான் வைத்திருந்த தர்ம ஆஸ்பத்திரிக்கு வரு வாள். அந்தக் குழந்தைக்குக் காலில் காப்பான் ஏற்பட்டு ரணமாகப் போய்ப் பிறகு மருந்து போட்டதில் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிவந்தது. அதனுடைய தாய் எத் தனேயோ வாஞ்சையோடும் சிரத்தையோடும் குழந்தைக்கு மருந்து வாங்கிக் கட்டிவந்தாள்.

முதல் நாள் அந்தக் குழந்தையை அவள் எடுத்துக் கொண்டு வந்தபோது கூட்டமாக இருந்தது. முதலில் கான் கவனிக்கவில்லை. வற்றிய உடம்பும் அழுக்குத் துணியும் உடைய அவள் கையில் நல்ல களை பொருந்திய முகத்தோடு குழந்தை இருந்தது. அவள் பரிதாபத்தை உண்டாக்கும் பார்வையோடு என்னுடைய தயையை எதிர்பார்த்து கின்ருள்.

தர்ம ஆஸ்பத்திரி என்று போட்டிருந்தேன் என்பது வாஸ்தவத்தான். ஆனலும் அது வெறும் விளம்பரத்துக் காகச் செய்த வேலை. தர்மமாவது! தயையாவது! அவ னவன் பிழைப்புக்கே பிறருடைய தர்மத்தை எதிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/21&oldid=535262" இலிருந்து மீள்விக்கப்பட்டது