உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறுந்த தந்தி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 - அறுந்த தந்தி


பாருக்கு அதிகக் கவலை இருந்தது. அவரைக் காட்டிலும் அதிகமாக ஹரிஜன காலேஜ் கமிட்டியாருக்கு இருந்தது. பொதுவாக ஜனங்கள் அனைவருக்குமே கவலை ஒரளவு இருந்தது.

மணி மந்திர ஒளஷதங்களால் குழந்தையின் வியாதிக்குப் பரிகாரம் தேடினார்கள். தினசரி நாடகத்தில் நடராஜ பிள்ளை நடிக்க முடியவில்லை. ஆகையால் வசூல் குறைவு தான். அதைக் குமரகுருபரர் பொருட்படுத்தவில்லை. பெரிய கனவுக் காட்சியாகத் திட்டம் போட்டிருக்கும் சகாய நாடகம் சரிவர நடக்கவேண்டுமே! அதற்கு ஹாஸ்ய சக்கரவர்த்தி வரவேண்டுமே” என்ற சிந்தனைதான் அவரைத் துளைத்தது. 'அந்த ஒரு நாள் அவர் வந்து நடித்து விட்டுப் போகட்டும். பிறகு ஒரு வருஷம் அவர் வரவே வேண்டாம். ஊரிலேயே இருக்கட்டும்' என்று கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டார்.

தினந்தோறும் குழந்தையின் தேக நிலைமையைப்பற்றிய கடிதம் குமரகுருபாருக்கு வந்தது. அவருக்குத் தம் நாடக சபை சிரிப்பை இழந்து நிற்கிறதே என்ற வருத்தம். அந்தச் சிரிப்பு அழாக்குறையாகச் சின்னஞ்சிறு குழந்தையின் தலையில் ஐஸ் பையை வைத்துக்கொண்டு ஒரு சிற்றுாரில் இரவும் பகலும் கண்விழித்து உட்கார்ந்திருந்தது. ஆயிரக்கணக்கான மக்களை வயிறு குலுங்க விலா தெரியச் சிரிக்க வைக்கும் அந்த ஆசாமி, முகத்தில் களை யின்றி, வார்த்தையில் ஜீவனின்றி ஹாஸ்யம் என்ற சரக் குக்கு எத்தனையோ காத தாரத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தார். ஹாஸ்யாஸ்த்தின் அபரிமிதமான வெற்றியைக் கண்டு சோகம் பழி வாங்க எண்ணிவிட்டதோ!

நாலு நாளைக்கு ஒரு முறை நாடக சபையின் அதிபர் போய்க் குழந்தையைப் பார்த்துவருவார். ஹரிஜன நிதிக் கமிட்டித் தலைவர் வாரத்துக்கு ஒரு முறை போய் வருவார். 'நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். இந்த வாரம் போனால் குழந்தை எழுந்து உட்கார்ந்துகொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/37&oldid=979777" இலிருந்து மீள்விக்கப்பட்டது