பக்கம்:அறுந்த தந்தி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹாஸ்ய நடிகர் 31

விடுவான். பெரிய தர்ம காரியத்தைச் செய்யப்போகும் இந்தச் சமயத்தில் பகவான் சோதிக்கிருர். ஆனலும் தர்மம் தலைகாக்கும். நீங்கள் இங்கேயே இருப்பதைவிட நடுவில் ஒரு நாள் மதுரைக்கு வந்து மீட்ைசி தரிசனம் செய்துகொண்டு வாருங்கள்’’ என்று அவர்கள் சொல் வார்கள். குமரகுருபரர் மெல்ல மெல்லச் சொல்லி ஒரு நாள் அவரை மதுரைக்குக் கூட்டிக்கொண்டே வந்து விட்டார்.

அன்ற நாடகத்துக்கு அளவில்லாத கூட்டம். ஆணுல் நடராஜ பிள்ளை நடிக்கவில்லை. வெறுமனே மேட்ைமீது வந்து கின்று பொதுஜனங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அவர் முகத்தில் மலர்ச்சியே இல்லை. இருந் தாலும் அவர் பேசியபோது ஜனங்கள் சிரித்தார்கள். “என் குழந்தைக்கு ஜூரம் வந்திருக்கிறது. அதனல் நான் இங்கே வர முடியவில்லை’ என்று அவர் சாமான்ய அர்த்தத்தோடு சமாசாரத்தைச் சொன்னர்.ஹாஸ்ய கடிகர் வாயில் சாமானிய வார்த்தை வருமோ! ஒவ்வொரு வார்த்தையிலும் நகைச்சுவை ததும்ப வேண்டாமோ!-- இந்தக் கொள்கையிலே ஊறிய மகாஜனங்கள் அந்த வாக்கியத்தைக் கேட்டுக் கால் மணி நோம் சிரித்தார்கள். 'ஜூாம் அங்கே வந்ததாம்; அவர் இங்கே வா முடியவில்லை யாம். என்ன நுட்பமான ஹாஸ்யம்! பார்த்தீர்களா?” என்று வியாக்கியானக்காரர்கள் விமரிசனம் செய்தார் கள். அந்தக் கரகோஷத்துக்கும் சிரிப்புக்கும் இடையே நடராஜர் வாடிய முகத்தோடு, வேண்டுமென்று வரு வித்துக்கொண்ட புன்னகையோடு மேடைமேல் கின்ருர். அவர் அகக்கண்ணில் குழந்தை யமனுடன் போராடிக் கொண்டிருந்த காட்சிதான் தோன்றியது. உள்ளத்துக் குள்ளே சோக நாடகம்; வெளியிலே ஹாஸ்யமென்ற எண்ணத்தால் உண்டான கோஷம்!

சகாய நாடக தினம் நெருங்கிக்கொண் டிருந்தது. எப்படியாவது அந்த ஒரு நாள் வந்து நாடகத்தை நடத்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/38&oldid=535279" இலிருந்து மீள்விக்கப்பட்டது