பக்கம்:அறுந்த தந்தி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வச் செயல் 41

தீபாவளிக்கு முதல் நாள் அவனுக்கு ஒன்றுமே ஒட வில்லை. விடிந்தால் ஊர் முழுவதும் தீபாவளி ஸ்நான மும் புது ஆடைகளும் பட்டாசும் மத்தாப்புமாக அமர்க் களப்படும். அதற்கு வேண்டிய முஸ்தீபுகள் அன்று பல ழாக அவன் கண்முன்னே ஒவ்வோரிடத்திலும் நடந்து கொண்டிருந்தன. மாமனர் வீட்டுக்குப் போகும் மாப் பிள்ளைகள் சுவர்க்கத்தில் காலை வைத்தவர்கள்போல உற் சாகமாக இருந்தார்கள். இந்த உல்லாச உலகத்தில் கணேசன் தனியாகத் துணையின்றி, தப்பல் கவிழ்ந்த வியா பாரிபோல மனம் உடைந்து போயிருந்தான். காலே ஒன்பது மணிக்கே பிராட்வேக்குப் போய் அங்கே ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு, அதி சீக்கிரமாகக் கம்பெனிக் குப் போய்விட்டான். மற்ற இடங்களில் தீபாவளிப் பேச்சும் ஏற்பாடுகளும் இருந்தன. கம்பெனிக்குள் புகுந்து வேலைமேலே கவனத்தைச் செலுத்தினுல் ஒரு வாறு தீபாவளியை மறக்கலாம் என்ற கிரீனவு அவனுக்கு. அங்கே போனுல் வேலை ஒடுகிறதா? தீபாவளிப் பேச்சு அங்கே இல்லையா? மானேஜர் பத்து வருஷத்துக்குமுன் கடந்த தம் கலைத்தீபாவளி விமரிசையை அளக்கிரு.ர்.டைப் அடிப்பவர் தம் தங்கைக்குத் தலைத்தீபாவளிக்கு எங்கும் கிடைக்காத அபூர்வமான புடைவை வாங்கின கதையைச் சொல்கிருர். அதோ அந்த சாற்காலி காலியாக இருக்கிறதே, அந்த இடத்துக்கு உரிய குமாஸ்தா மூன்று நாள் லீவு வாங்கிக்கொண்டு மாமனர் விட்டுக்குப் போயிருக்கிருன் -தலைத்தீபாவளிக்குத்தான். எல்லாம் தீபாவளிமயம் ! அதுவும் தலைத்தீபாவளி! எந்த இன்பம் தனக்குக் கிடைக் கும் என்று எண்ணிக் காத்திருந்து ஏமாந்தானே, அந்த இன்பம் கணேசன் ஒருவனுக்குத்தான் இல்லை; மற்றப்படி உலகம் முழுவதும் அதை அநுபவிக்கிறது! இது விதியின் கொடுமையல்லாமல் வேறு என்ன ?

ஆறு மணி அடித்தது. எல்லோரும் புறப்பட்டார் கள். தீபாவளிக்குச் சாமான் வாங்க நாலு மணிக்கே பலர் போய்விட்டார்கள். கணேசன் ஆறு மணி வரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/48&oldid=535289" இலிருந்து மீள்விக்கப்பட்டது