பக்கம்:அறுந்த தந்தி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேய்வச் செயல் 47

எழுதின சீட்டையும் மாற்றி ஒட்டிவிட்டான். உன் அக்கா, அம்மாவிடம் ரூபாய் கொடுத்து வைத்திருக் தாள். கொஞ்சங் கூடப் போட்டு அந்தப் புடைவையை வாங்கி அனுப்பினுேம். இன்று அவளிடமிருந்து வந்த கடிதத்தால் பார்சல் மாறின. சங்கதி தெரிந்தது. நீ ஏன் அதைப்பற்றி ஒன்றும் எழுதவில்லை? உடனே புடை வையை அத்திம்பேருக்கு அனுப்பிவிடு. பாவம் ! தீபாவளி கொண்டாடாவிட்டாலும் புது வேஷ்டியாவது கட்டிக் கொள்ளட்டுமென்று, அம்மாவுடன் வாதாடி, வேஷ்டி வாங்கி உனக்கு அனுப்பினேன். அது உனக்குக் கிடைக்க வில்லை. பார்த்தீர்களா! தெய்வமே இப்படித்தான் செய்ய வேண்டுமென்று வழி காட்டுகிறது’ என்று அம்மா இப் போது சொல்லிக் காட்டுகிருள். இந்தக் கூத்தில் உன் அக் காவுக்குத் தீபாவளி சமயத்தில் புடைவை போய்ச் சேர வில்லை. அவள் என்ன பாவம் செய்தாள்? தெய்வச் செயலை யார் அறிவார்கள்?. . . .'

கடிதம் கணேசன் கையிலிருந்து நழுவியது. அவன் வாயிலிருந்து, 'தெய்வச் செயலை இப்போதும் அப்பா தெரிந்துகொள்ளவில்லை' என்ற வார்த்தைகள் கழுவின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/54&oldid=535295" இலிருந்து மீள்விக்கப்பட்டது