பக்கம்:அறுந்த தந்தி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அறுந்த தந்தி

திருமகளும் போல-போதும் ! நீங்களே உபமானம் சொல்லிக்கொள்ளுங்கள்.

裘 * 安 응용 பிரிய மனம் வராமல் விடை பெற்றுக்கொண்டான். 'அடுத்த தடவை வரும்போது அப்பாவைக் கதர் வேஷ்டி வாங்கி வைத்திருக்கச் சொல்கிறேன். நீங்கள் கட்டிக் கொள்ளலாம்” என்று குறும்புத்தனமாக லக்ஷ்மி சொன்ன போது அவனுக்கு உடம்பே தெரியவில்லை. அதிலும் 'கட்டிக்கொள்ளலாம்' என்பதை அழுத்திச் சொன்ன போது அவன் பூரித்துப் போனன்.

சுவர்க்கலோகத்தை விட்டுச் சென்னைமா நகரமாகிய நாகத்தில் மயிலாப்பூராகிய பகுதியில் அறையாகிய சிறைக்கு வந்து சேர்ந்தான். அறைக்குள்ளே கால் வைத் தானே இல்லையோ, தபால்காான் சந்து வழியாகப் போட் டிருந்த இாண்டு கடிதங்கள் உள்ளே கிடப்பதைப் பார்த் தான். ஒன்றில் கடிதமும் ரெயில்வே ரசீதும் இருந்தன. அவன் தகப்பனர் எழுதியிருந்தார்.

4. . . . எல்லோரும் புது வேஷ்டி கட்டிக்கொள்ளும் போது நீ மாத்திரம் பழைய வேஷ்டியோடு இருந்தால் வருத்தமாக இருக்குமென்று இதை அனுப்பியிருக்கிறேன். எண்ணெய் தேய்த்துக்கொள்ள வேண்டாமென்று அம்மா எழுதச் சொன்னள். காலையில் இதைக் கட்டிக் கொள். பிழைத்துக் கிடந்தால் அடுத்த வருஷம் தீபாவளி கொண்டாடலாம். . . . '

வேஷ்டியா? புடைவை அல்லவா வந்தது? அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. மற்ருெரு கடிதத்தையும் பிரித் துப் பார்த்தான்:

'. . . . துணி வாங்கிக் கட்டி அனுப்படா என்று சொன்னேன். முட்டாள் ! அவசரமாகக் காகிதத்தில் சுற்றி அனுப்பிவிட்டான். அந்த அவசரத்தில் உன் அத்திம்ப்ேர் விலாசம் எழுதின சீட்டையும் உன் விலாசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/53&oldid=535294" இலிருந்து மீள்விக்கப்பட்டது