பக்கம்:அறுந்த தந்தி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அறுந்த தந்தி

தலுைம் அவளுக்கு கிரந்தரமான பெரிய துக்கம் உண்டாக வில்லை. இப்போதும் எங்கோ ஒர் ஊரில் ராமாயணப் பிரசங்கம் செய்துகொண் டிருக்கிருர்’ என்று நினைத்து ஒரு விதமாக மனசைச் சமாதானம் செய்துகொண்டாள். தன் அருமைக் குழந்தை சீதாலக்ஷ்மியைப் பாதுகாத்து நல்ல பிள்ளையாக ஒருவனேப் பார்த்து அவனுக்குக் கல்

யாணம் செய்து கொடுக்கவேண்டும் என்ற ஒன்றுதான் அவளுடைய வாழ்க்கைச் சங்கற்பமாக ஆகிவிட்டது. சீதா லசஷ்மியை எப்போதுமே அன்பாகவும் செல்லமாகவும் வளர்த்து வந்தாலும் இப்போது அவளிடத்தில் தன் உயி ரையே வைத்துவிட்டாள்.

பெட்டியில் வைத்திருக்கும் வெள்ளிக் குத்துவிளக்கை விசாலம் என்ன காரணத்தாலோ வெறுத்து வந்தாள். தன் கணவர் அதை அருமையாகக் காப்பாற்ற வேண்டு மென்று சொல்லியிருந்தமையால் அதைப் பெட்டியில் வைத்துப் பூட்டியிருந்தாளே ஒழிய, இல்லாவிட்டால் அதை முன்பே யாராவது பிராமணனுக்குத் தானம் பண்ணி யிருப்பாள். தன்னுடைய மங்கல வாழ்வுக்கு யமனுக வக் தது அந்த வெள்ளி விளக்கு என்று எண்ணினுள். அதை நாளுங் கிழமையுமாக, இன்று, இந்தக் கார்த்திகைத் திரு நாளில், ஏற்றி வைக்க வேண்டுமென்ருல் அவள் மனம் எப் படிச் சம்மதிக்கும்?

  1. . 受

சீதாலக்ஷ்மி என்றும் இல்லாதபடி அந்த விஷயத்தில் பிடிவாதம் பிடித்தாள். 'அம்மா, அப்பா இந்த விளக்கை ஏற்றி ஸஹஸ்ரநாமம் பண்ணவேணுமென்று சொன்னரே; அதை அந்த வருஷத்தான் ஏற்ற முடியவில்லை; பூரீ ராம சந்திரமூர்த்தி நம் வீட்டில் துக்கத்தைக் கொண்டு வந்து ட்டார். அடுத்த வருஷம் ஏற்றியிருக்கலாமே! அப்பா காலமாகிநாலு வருஷகாலம் ஆயிற்றே. அதை எடுத்து ஏற்றி வைத்துப் பூஜை செய்தால் அப்பாவுக்குத் திருப்தியான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/81&oldid=535321" இலிருந்து மீள்விக்கப்பட்டது