பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40

கேட்டுத் தமது நெற்குவை, நிதிக்குவை யனைத்தையும் சிவனடியார்கள் கொள்ளட்டும் எனத் திறந்து விட்ட நல்லார் இடங்கழியாரின் அன்பின் திறத்தைக் கண்டு அடங்கா மகிழ்ச்சி கொள்வாம்.

53. செருத்துணை நாயனார்

சிவபிராற்குரிய பூவை இவள் மோந்தாள் என்று மோந்த மூக்கை அரிந்து விட்ட செருத்துணை நாயனாரின் கால்களைப் பணிவாம்.

54. புகழ்த்துணை நாயனார்

பஞ்சத்தாற் பசியால் வாடி மெலிந்து அபிடேக குடத்தை இறைவன் முடியில் விழுத்தி நடுங்குதலும் தமது பசி கெட இறைவன் அருளிய படிக்காசைப் பெற்றும் உய்ந்த புகழ்த்துணை நாயனாரின் புகழை ஓதி உய்வாம்.

55. கோட்புலி நாயனார்

போரினின்று நான் மீண்டு வருமளவும் சிவனடியார்களுக்காக வைத்த இந்நெற் குவையைத் தொடக்கூடாதென்று சொல்வியும் கேளாது எடுத்தவர்களை வாள் கொடு வீசிய கோட்புலியாரின் பத்தியைச் சிந்திப்பாம்.

56. பூசலார் நாயனார்

காசு கிடையாமை கொண்டு சோர்வு அடையாமல் மனத்தாலே ஈசர்க்குக் கோயில் அமைத்த அன்பர் பூசலார்க்குப் பாத பூஜை புரிவாம்.