பக்கம்:அறுவகை இலக்கணம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii இவ்வாறு முச்சந்தியிலே உழன்று கொண்டிருந்த தமிழ்ப் புலவர்களுக்குத் தமிழ்மொழியின் தொன்மை, புனிதத் தன்மை தனித்தியங்கும் ஆற்றல் ஆகியவற்றை எடுத்துக்காட்டி, புலவர் களுக்குள் இணக்கம் ஏற்பட வேண்டும் என அறிவுறுத்தி ஒரு நல்லவையில் கூறமுடியாதபடி கொட்டுதல் ஆபாசமாகக் தெளிவுறுத்தித் தமிழ்ப்புலவர்களைச் தரமன்று எனத் சமுதாயத்திற்குப் பயன்படுமாறு மடைமாற்றம் செய்தாக வேண்டிய வரலாற்று இன்றியமையாமை ஏற்பட்டுவிட்டது. காலத்தின் இக் கட்டாயம்தான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் புலமை இலக்கணம். புலமை இலக்கணம் புகல்வது என்ன? தமிழ்மொழிக்கு உயர்மொழி தரணியில் உளதுஎனின் வெகுளியற்று இருப்போன் வெறும்புல வோனே. (705) தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதுஎனில் அஃதுஉணர் அலகையில் தாழ்வுஎனல் அறமே. (672) அருமை யறியான் அவையிடைப் புகுந்து பெருமைபா ராட்டலும் ஏனையும் பிழையே.(692) காகப் புள்ளன இனத்தொடு கலவாது ஞாளிபோற் பகைக்கும் நாவலர் பலரே. (680) காமக் கடலே கதிஎனக் கருதிப் போவார் புலமையில் புண்ணியம் இன்றே. (687) கால வேற்றுமை கருதாப் புலவன் சீலனே எனினும் சிறுமை யினனே. (693) தமிழ்க்கும் தனக்கும் சார்தரு நெறிக்கும் தன்இனத் தினர்க்கும் தவறுஉறா வண்ணம் முயல்வோன் புலமை முதன்மைத் தாமே. (747) புலமை இலக்கணத்தில் இடம் பெற்றுள்ள இந்த ஏழு நூற்பாக்களை ஓரளவு இவ்வியலின் சாரம் எனலாம். இந்