பக்கம்:அறுவகை இலக்கணம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Øiv நூலாசிரியருக்கு 43 ஆண்டுகள் இளையவராகிய மகாகவி பாரதியாரும் தம் சின்னச்சங்கரன் கதையில் அன்றைய புலவர் களின் நிலையையும், வேறு பல இடங்களில் புலவர்கள் ஒழுக வேண்டியவற்றையும் தெளிவாகக் கூறுகிறார். இவ்விருவரும் ஒரே கருத்தை வேறுவேறு கோணங்களில் தருகின்றனர். சுவாமி களிடம் சமய உணர்வும் பாரதியாரிடம் சமுதாய உணர்வும் விஞ்சி நின்றதே இவ்வேறுபாட்டிற்குக் காரணம். இவையே புலமை இலக்கணம் தோன்றிய சூழலும், நுதலும் பொருளும் ஆம். ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த வந்தது குறிஞ்சிப் பாட்டு; தமிழனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுந்தது புலமைஇலக்கணம். இதனை மொழியின் வளர்ச்சி எனலாமா என்பது சிந்தனைக்குரியது. இந்நூல் அதிகம் பரவாத காரணம் பழைய மரபிலேயே காலூன்றி இப்புலமை இலக்கணத் தைப் படைத்தும், தம் சாத்திர தோத்திர நூல்களில் பலவாறு கூறியும் சுவாமிகள் தம் கருத்தைப் பரப்ப முயன்றார். ஆனால் அவர் அதில் மிகப் பெருமளவு வெற்றியடைய இயலவில்லை. இவ்வியலாமை சுவாமிகளின் குறையன்று. பாரதியாருக்கு வாய்த்த நாட்டு விடுதலை இயக்கம் போன்ற ஓர் உணர்ச்சி மிக்க சார்பு சுவாமிகளுக்கு அமையவில்லை. சுவாமிகளுடைய கருத்துகளை அறிவுபூர்வமாக அணுகி, அவற்றைச் சமுதாயத் திற்கு ஆக்கபூர்வமாக அறிமுகப்படுத்தும் ஓர் இயக்கமும் அமையவில்லை. சுவாமிகளின் அரிய சிந்தனைகள் ஆய்விற்கும் பயன்பாட்டிற்கும் உரியவையாக அல்லாமல் பொருளுணர்ச்சி யற்ற வெறும் பாராயணச் சடங்கிற்குரியனவாய்க் பட்டு, அதிகம் பரவாமல் போனமை தமிழினத்தின் தவக் குறையேபோலும். ஆனால் இப்போது சிரவைக் கவுமார மடாலயமும், பேரூர் சாந்தலிங்கஅடிகளார் திருமடமும் சுவாமி களுடைய நூல்களைச் சமய இலக்கியமாக மட்டுமன்றிச் சமுதாய நோக்கிலும் ஆராய்ந்து வெளிப்படுத்தும் அரிய பணியில் ஈடுபட்டுள்ளன. கருதப் எழுத்தின் வரிவடிவம் காட்டுதல் இவ்வாறு காலத்தின் கட்டாயத்தால் இன்றியமை யாததாகிவிட்ட புலமையிலக்கணத்தோடு விரிந்த அறுவகை