பக்கம்:அறுவகை இலக்கணம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi மாற்றமடைந்து தனர் என்றால் தொல்காப்பியர் கால நிலை எப்படி இருந் திருக்கும்? அறிஞர் திரு.அ. சண்முகதாஸ் அவர்களின் கணிப்பு, “எமது பழைய தமிழ் இலக்கணகாரர் எழுத்துக்களின் பௌதிக வடிவம் பற்றி அவ்வளவு கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. சாசன வழக்குகளுக்கு முக்கிய இடம் வழங்கிய வீரசோழிய இலக்கணகாரரே சாசனங்களில் நூற்றாண்டுகள் தோறும் வந்த தமிழ் வரிவடிவங்கள் பற்றிக் குறிப்பிட்டாரில்லை. தமிழ் இலக்கணகாரர் வரிவடிவம் பற்றி விளக்கம் கொடுக்காததற்கு ஒரு காரணம் உண்டு. அஃதாவது அந்நாட்களிலே வாசிப்பவர்கள் குறைவாகவே இருந் தனர். "கூறுதல்", "மொழிதல்" என்பனவே எமது மரபாக இருந்ததென்பதற்கு எம் பண்டைய இலக்கியங்கள் சான்று பகர் கின்றன. ஆனால் வீரமாமுனிவருடைய காலத்திலோ அச்சுயந் திரம் தமிழ்நாட்டிலே செல்வாக்குப்பெற்ற காரணத்தால் வாசிப் பவர்களுடைய தொகை தமிழ் நாட்டிலே அதிகரிக்கத் தொடங் கியது. இதன் காரணத்தினால் எழுத்துக்களின் வரிவடிவம் பற்றிய சிந்தனை அவசியமாயிற்று. வீரமாமுனிவர் இக்கால கட்டத்திலேயே தமிழ் எழுத்துக்களின் வடிவமாற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றினார்" என்பதாகும். தமிழ் எழுத்துகள் அனைத்திற்கும் தம் காலத்தில் வழங்கிய வரிவடிவத்தைத் தெளிவாகக் காட்டிய சுவாமிகள் அன்று ஆங்காங்கு வழக்கிலிருந்த ஒரு சில வரிவடிவங்களையும் எடுத்துக்காட்டி அவை தவறானவை என்கிறார். வீரமா முனிவரால் செய்யப்பெற்றதாகக் கருதப்படும் எழுத்துச் சீர்திருத்தத்தை 48,49-ஆம் நூற்பாக்களில் ஏற்றுக் கொள்கிறார். 49-ஆவது நூற்பா ஒரு பாராட்டாகவே அமைந்துள்ளது. அரைமாத்திரை ஒலிக்கும் மெய்யெழுத்தைக்காட்டுவதற்காக இடப்படும் தலைப்புள்ளியை எகர ஒகரமாகிய - ஒருமாத்திரை உடைய - உயிர் எழுத்துகளுக்கு இடுதல் சற்றும் பொருத்தமற்ற குறியீடு என்பது இவர் வாதம். ஆனால் தமிழ் அச்சுநூல்களி லேயே தலைப்புள்ளி பெற்ற எகர ஒகரங்களைப் பார்க்கலாம். 1. தமிழ்மொழி இலக்கண இயல்புகள்-அ. சண்முகதாஸ்,பக்.114