பக்கம்:அறுவகை இலக்கணம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii காட்டு - சென்னைக் கல்விச்சங்கத்திற்காக திரு தாண்டவராய முதலியார் அவர்களால் 1839-இல் பதிப்பிக்கப்பெற்ற சேந்தன் திவாகரம். இப் பொருத்தமற்ற குறியீட்டை மாற்றியமைத்த தையே 49-ஆம் நூற்பா சிறப்பாகப் பாராட்டுகிறது. அகர முதல் னெளகார இறுதியான எழுத்துக்களுக்கேயன்றிக் கணக்கில் பயன்படும் அலகெழுத்துகள், எழுத்துச் சுருக்கத்தின் பொருட்டு ஆளப்படும் கூட்டெழுத்துகள், குறிப்பெழுத்துகள் ஆகியவற்றின் வரிவடிவங்களையும் இந்நூலின் எழுத்திலக்கணம் எடுத்துக்காட்டுகிறது. இதுவும் இவ் வறுவகைஇலக்கணத்திற்கே சிறப்பாக உரியதாகும். பொருள் இலக்கணப் புதுமை ஐந்திலக்கணங்களைத் தனித்தனியே கூறும் முதல்நூலாகிய வீரசோழியமே பொருள் இலக்கணத்தில் அகம், புறம் என்னும் பண்டைய நிலையைவிட்டு விலகிவிட்டது. அடுத்த பெருநூலாம் இலக்கணவிளக்கமும்தொல்காப்பியவழியையே பின்பற்றினாலும் புறத்திணையை மிகவும் சுருக்கிவிட்டது. தமிழில் அகப்பொருள் இலக்கணம் மலர்ந்த அளவு இலக்கிய ரீதியாகவோ இலக்கண வகையிலோ புறத்திணை வளம் பெறவில்லை என்பதுண்மை. இதன் காரணத்தை ஆராய்தல் ஈண்டு வேண்டற்பாலதன்று. இலக்கண விளக்கத்தைத் தொடர்ந்து தோன்றிய தொன்னூல் விளக்கம் அகப்பொருள், புறப்பொருள் என்பதற்கு முற்றிலும் புதுவகையாக விளக்கம் தருகிறது. அகப்பொருளுக் குரிய மரபு வழிப்பட்ட உரிப்பொருளையே சுட்டாத இந்நூலில் ஒரு நூற்பாவின் பகுதியாகிய ஆறு அடிகளில் புறத்திணை ஏழும் கூறி முடிக்கப்பட்டு விடுகின்றன. இந்நூலையடுத்து வந்த முத்துவிரியத்திலோ பொருளதிகாரத்தின் அகவொழுக்க இயலில் எட்டு நூற்பாக்களில் புறத்திணைகளின் அறிமுகம் மட்டுமே காணக் கிடக்கிறது. இவ்வாறு பல்வேறு கருத்துக்களுக்கிடமாயமைந்த பொருளதி காரம் இவரால் அகம்,புறம், அகப்புறம் என மூன்றாகப்