பக்கம்:அறுவகை இலக்கணம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii பகுக்கப்படுகிறது. அகப்பொருளில் குறிப்பிடத்தக்க அளவு பெரிய மாற்றங்கள் இல்லை என ஒருவாறு கொள்ளலாம். ஆனால் எல்லோரும் அகப்பொருளில் கொள்ளும் குறிஞ்சி முதலிய ஐவகை நிலப்பாகு பாட்டை இவர் புறப்பொருளில் வேண்டுவர். இவர் காட்டும் புறப்பொருள் முற்றிலும் வேறா னது. இவரே மற்றோரிடத்தில், "அகப்பொருள் சாமம்; புறப் பொருள் சமர் என்று அறைந்துள்ளார்; யாமும் அறுவகை இலக்கணத்து ஒருவா சொற்றுளம்; உணர்வது கடனே”1 என்கிறார். அகப்புறம் என்பது ஓரளவு தத்துவக் கொள்கை -களாக உள்ளன. அணியிலக்கணத்தன்மை இவ்வாறே தண்டியலங்காரம், 'மாறனலங்காரம், சந்திரா லோகம், குவலயானந்தம் ஆகிய தனி அணியிலக்கண நூல்களுக் குப் பிறகு தோன்றிய இவ்வறுவகை இலக்கணம் அவற்றைப் போல அணிகளைப் பட்டியலிட்டுக் காட்டவில்லை” “அணிஎனல் புலவோன் அறிவள வாமே”2 என்பது இவர் கொள்கை. இப் பகுதியில் உவமையணி ஒன்றே இடம் பெற்றுள்ளது. அதுவும் உவமானம், உவமேயம், பொதுப்பண்பு. உருபு ஆகிய மரபு வழியில் விளக்கப்படாமல் உவமான சங்கிரகங்களின் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. இவருடைய அணியிலக்கணமும் ஒரு புதிய பார்வையே. சற்றேறக்குறையத் தொல்காப்பிய உவமை யியல் போலவும் அமைந்துள்ளது எனக்கொள்ளவும் இடமுண்டு. அறுவகை இலக்கணம் ஒரு முதல்நூல் புலமை இலக்கணம் என ஒரு புத்திலக்கணத்தையே படைத் துக்கொள்ளல், எழுத்திலக்கணத்தில் வரிவடிவை நுழைத்தல், பொருள் இலக்கணத்தின் புதுமை ஆகிய பெருமாற்றங்களாலும் சொல், யாப்பு, அணி இலக்கணங்களிலும் புதுவழி கண்டுள்ள தாலும் இது பழைய நூல்களில் பயின்றுள்ள நூற்பாக் களையே மாற்றியமைத்தும் அல்லது அப்படியே எடுத்தாண்டும் 1.ஏழாமிலக்கணம் 258 2. மேலது 283