பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மணிவிழாத் தலைவர் ஒரத்துர் புலவர் சு. குஞ்சித பாதம் பிள்ளை அவர்களின் வாழ்க்கை ஓவியம் (எழுதியவர் : சீர்காழி, புலவர் த. சுந்தரேசன்) 'அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்’ உலகில் மனிதன் பெறவேண்டிய பேறுகளுள் தலை சிறந்தது மணிவிழாவாகும். பிறப்பின் மாட்சியைச் சிறப் பாய்த் தெரிவிப்பதும் அதுவே. பிறந்த ஆண்டினைத் திரும்பக்கண்டு துய்க்கும் இப்பேறு தெய்வ அருளா லன்றி எய்த முடியாது என்பது உறுதி. அன்று குழந்தை உருவாய் இருந்த ஒருவர் இன்று பலர்க்கும் ஆசி வழங்கும் இறைமகனாகி விளங்குவது தவப்பேறே. இத்தகைய பேறுபெற்ற ஒரு சீரிய நேயரைப்பற்றிய வாழ்க்கை ஒவியத்தை வரைந்து காட்ட முன் வந்தேன். அவர் யார்? ஒரத்துர் புலவர். திரு. சு. குஞ்சிதபாதம்பிள்ளை அவர்களே. புலவராய், பொருளாளராய், கொடையாளராய், தொண்டராய் சிவ நெறிச் செல்வராய்க் காட்சியளிப்பவர் இவர். பிறப்பு : கடந்த சாதாரண ஆண்டு ஆனித் திங்கள் பரணி விண்மீன் ஒளிரும் 19-ம் நாளே இவர் பிறந்த நாள். மணிவிழாச் செய்யும் சிறந்த நாளும் இன்றைய சாதாரண ஆண்டே. பிறந்த ஊரோ பொன்னங்கோயில். தந்தையாரோ சுந்தரம்பிள்ளே. தாயார் பெரியநாயகி. உடன் பிறந்தவர் தேவாரத்தை நாவாரப் பாடும் முத்துக்குமரப்பிள்ளை. சகோதரிகள்