பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரத்தின் கல்வி அறிவுள்ளோன் : பரமன் அடியே சிந்திப்போன் ; கரத்தின் பயனும் இதுவெனவே கடவுட் பூசை கைக்கொண்டோன் ; வரத்தின் வருகுஞ் சிதபாதன் , மனையாள் புனித வதிப்பெயராள் ” 4. " அற்புதன் பூசை செய்யும் அருங்குணக் கனவற் பெற்றாள் ; இற்புடைப் பணிகள் செய்வாள் ; இறையடி யவர்கள் ஏற்ப பொற்புடன் முகமன் செய்வாள் ; போனகம் ஊட்டுஞ் சீராள் ; கற்பினுக் கரசி யாவாள் ; கருதுமீ ரெண்பே றுற்றாள் ;” 5. " பொன்னின் நாண்சேர் புனிதவதி பொருந்தும் ஆறு பத்தாண்டு மன்னும் விழாப்போல் தில்லை நகர், மருவு பரதுர் கோயில்கட்கும் பன்னும் அறங்கள் கலைக்கோயில் பலசெய் குஞ்சித பாத நீர் பொன்னம் பலவன் அருட்புகழும் பொருந்த வாழி வாழியரோ !” " வாழி! சிவநெறி ; வாழி சிவ இயல்: வாழி! சிவகுரு : வாழி உலகமே.” ஸ்ரீசிவஞான திருத்தணி, சிதம்பரம், 29–6–70 இங்ங்னம் : ஆ. சு. கணபதிப் பிள்ளை, தில்லைத் திருமுறைக் கழகத் தலைவர்.