பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


63 இறைவனே நோக்கி வேண்டும் வேண்டுகோளாக அமைந்த இத்திருப்பாடலில், கூடும் அன்பினிற் கும் பிடலேயன்றி, வீடும் வேண்டா விறலின் விளங்கிய அடியாரியல்பு இனிது புலனதலறிக. கருத்தினுல் நீகருதிற் றெல்லாம் உடனே திருத்தலாஞ் சிக்கென நான் சொன்னேன் பருத்தரங்க வெள்ளநீ ரேற்ருன் அடிக்கமலம் நீவிரும்பி உள்ளமே யெப்போதும் ஒது. (73) இ.ள்: நெஞ்சமே, ஆழ்ந்த துண்ணுணர்வில்ை நீ கருதியது அனேத்தும் திருத்தமுறப் பெறலாம். அங்ங்ணம் பெறுதற்குரிய நெறியினே இப்பொழுது யான் உறுதியாகச் சொல்லுகின்றேன். ( கேட்பாயாக ). பெரிய அலேகளேயுடைய பெரு வெள்ளமாய் வந்த கங்கைப் புனல் முழுவதையும் தனது சடைக் கற்றை யிலே ஏற்றருளிய சிவபெருமான் தி ரு வ டி த் தாமரைகளே நீ எப்போதும் அன்புடன் நினேந்து ஒதுவாயாக எ-று. கருத்து-ஆழ்ந்துணரும் நுண்ணறிவு கருதிற்று எல்லாம்-கருதியது முழுவதும் ; எல்லாம் என்பது எஞ்சாமைப் பொருளில் வந்தது. திருத்தலாம்-திருத்த மாகப் பெறலாம். சிக்கென-உறுதிய க. தெளிவாகச் சொல்கின்றேன் என் பார் சொன்னேன் என இறந்த காலத்தாற் கூறினர். பருத் தரங்கம்-பெரிய அலே. பத்தியில்ை மறவாது ஏத்துக என்பார் நீ விரும்பி எப்போதும் ஒது எனப் பணித்தருளினர்.