6
அலிபாபா மார்ஜியானா டூயட்
அலிபாபா- மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே?
மார்ஜியானா:- பேசும் வார்த்தை உண்மைதானா ?
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா?
அலிபாபா:- கண்ணிலே மின்னும் காதலே!
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே?
நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே!
மார்ஜியானா:- நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே?
(பேசும்)
அலிபாபா:- உனது ரூபமே உள்ளந் தன்னில் வாழுதே!
மார்ஜியானா:- இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே!
இருவரும்:- அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்!
(மாசிலா)
டான்ஸ் பாட்டு
நாம-ஆடுவதும் பாடுவதும் காசுக்கு!
பலர்-ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு!
சிலர்-கூடுவதும், குழைவதும் காசுக்கு!
காசுக்கு... காசுக்கு !
(நாம் ஆடு)
பல்லு-இல்லாத வெள்ளை தாடி—மாப்பிள்ளை
தேடி - தம்
செல்லப் பெண்ணைத் தந்திடுவோர் கோடான கோடி
எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு!
(நாம் ஆடு)