பக்கம்:அலிபாபா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அலிபாபா


கொண்டான். மேற்கொண்டு மறைப்பதில் பயனில்லை என்பதையும் அவன் கண்டான். எனவே, முந்தையநாள் வனத்திலே குகையில் நடந்த நிகழ்ச்சியை அவன் அண்ணனிடம் விவரமாகச் சொன்னான்.

காஸிம், “அந்தக் குகை எங்கேயிருக்கிறது? அதன் வாயிலைத் திறப்பதற்கும் அடைப்பதற்கும் உரிய மந்திரச் சொற்கள் எவை? இவற்றையெல்லாம் நீ எனக்கு விளக்கமாகச் சொல்லாவிட்டால், உன்னிடம் புதையற் செல்வம் வந்திருப்பதாக நான் வாலியவர்களிடம்[1] தெரிவித்துவிடுவேன்! நீ உன் செல்வம் முழுவதையும் இழக்க நேரும்!” என்று பயமுறுத்தினான். இதற்குப்பின் அலிபாபா முழுவிவரத்தையும் அவனுக்குச் சொல்லி விட்டான். அவன் அண்ணனுடைய பயமுறுத்தலுக்குப் பணிந்துவிட்டான் என்பதில்லை. இயற்கையிலேயே அவன் நற்குணமும் அமைதியும் நிறைந்தவன். ஆதலால், குகை இருந்த இடத்தையும், அதன் வாயிலைத் திறப்பதற்கும் அடைப்பதற்கும் உரிய மந்திரச் சொற்களையும் காஸிமுக்கு அறிவித்தான்.


  1. வாலி - காவலர் தலைவர் போலிஸ் தலைமையதிகாரி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/18&oldid=511527" இலிருந்து மீள்விக்கப்பட்டது