பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

ஏதன்ஸ் வீழ்ச்சியுற்ற பிறகு சிறிது காலம் ஸ்பார்ட்ட மக்களே நாடு முழுவதும் செல்வாக்குப் பெற்று விளங்கினர். பின்பு அவர்களுக்குப் போட்டியாகத் தீப்ஸ் நகர மக்கள் தலையெடுத்து அவர்களை அடக்கி வென்றனர். அப்பொழுது அவர்களுக்குத் தலைமை தாங்கிய தளபதி வெற்றி வீரனான எபிமினாண்டஸ் என்பவன். அவனைப் பாராட்டிப் போற்றுவதற்கு மாறாக, அவனிடம் பொறாமை கொண்ட சிலருடைய சூழ்ச்சியால், தீப்ஸ் மக்கள் அவனை இழிவு செய்தனர். படைத் தலைமையிலிருந்து அவன் நீக்கப் பெற்று, ககரத் துப்புரவுத் தொழிலாளியாக நியமிக்கப்பெற்றான். அதீனியர்களும், ஸ்பார்ட்டர்களும், பொதுவாக எல்லா யவனர்களுமே சகுனமும் சாத்திரமும் பார்ப்பவர்கள். பகைவர் படையெடுத்து வந்த காலத்திலும், அவர்கள் சகுனங்களைப் பற்றியும், நாளையும் கோளையும் பற்றியும் விவாதம் செய்த பின்புதான் எதிர்த்து நிற்பது பற்றி முடிவு செய்வார்கள். அங்தக் காலத்திலே கூட, எபிமினுண்டஸ், ‘தாய்த்திரு நாட்டுக்காகப் போரிடுவதே நல்ல சகுனம் !’ என்று கூறிவந்தான். அத்தகைய துாய வீரனைத் தீப்ஸ் நகரத்தார் நீடித்த நாள் இழிநிலையில் வைத்திருக்க முடியவில்லை. மற்றைத் தலைவர்கள் தளர்ந்து வீழ்ச்சியுற்றபின், அவனே மீண்டும் படைத் தலைவனாக்கப் பெற்றான். யவன காட்டின் தென்பகுதியின்மீது அவன் மூன்று நான்கு முறை படையெடுத்து, ஒவ்வொரு முறையிலும் செருக்குடைய ஸ்பார்ட்ட மக்களைத் தோற்கடித்தான். இறுதியில் அவன் போரில் வெற்றி பெறுகையில்,