பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

சாணக்கியர் மன்னர் மன்னரான சந்திரகுப்தரின் முதல் அமைச்சராயிருந்த போதிலும், மிக்க எளிய வாழ்க்கையே வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது. பண்டை நூல் ஒன்றில் அவர் குடியிருந்த வீட்டின் வருணனை காணப்படுகின்றது; இடிந்து போன சுவர்கள், மேலே உலர்வதற்காகப் போடப்பெற்றிருந்த பலாசங் குச்சிகளால் வளைந்து அழுந்திப் போன கூரை, உட்புறம் மாணவர்கள் சேர்த்து வைத்திருந்த தருப்பைக் கட்டுகள், உலர்ந்த காட்டுவரட்டிகளை உடைத்துத் தூளாக்க உதவும் ஒரு கல் துண்டு ஆகிய இவையே அவர் வீட்டில் காணப்பட்டன.

சாணக்கியர் பாடலியில் ஆண்டு வந்த நந்தர்களை ஒழிக்க வேண்டும் என்று சூள் உரைத்தார் என்றும், அது நிறைவேறும்வரை தம் சிகையை முடிப்பதில்லை என்று அவிழ்த்து வைத்திருந்தார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர் சோழியராதலால் முன் குடுமி உள்ளவர். ஆகவே அவிழ்ந்து கிடந்த அக்குடுமி பார்ப்பவர்களுக்கெல்லாம் தெளிவாய்த் தெரியும். நந்தர்கள் அழிந்து, சந்திரகுப்தரின் ஆட்சி ஏற்பட்டதும், அவர், “சினமாகிய தீயின் புகைக் கொடி எனது சிகை! அது நந்த வமிசத்துக்குக் கரு நாகம்! நந்த முளைகளை எதிர்த்து நீறாக்கியது இந்தச் சினத் தீ! பூமியின் நோய்களைப் போன்ற நந்தர்கள் ஒன்பது பேர்களும் என்னால் வேரோடு களைந்து எறியப்பட்டார்கள். பொய்கையிலே நிலைத்து நிற்கும் தாமரைபோல், நரேந்திரராகிய சாணக்கியரிடத்திலே திருமகள் நிலைத்து நிற்கிறாள்!” என்று பெரு