பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

திஷ்யன் என்று அசோகருக்கு ஒரு தம்பி இருந்தான் என்றும் தெரிகின்றது. அசோகருடைய மனைவியர் தேவி (வேதிஸ மகாதேவி சாக்கிய குமாரி), காருவாகீ, அசந்தமித்திரை, பத்மாவதி, திஷ்யரட்சிதை என்போர். இவர்களில் தேவிக்கு மகேந்திரனும், காருவாகீக்குத் திவாரனும், பத்மாவதிக்குக் குணாளனும் மைந்தர்கள். ஐலௌகா என்று ஒரு குமாரனும் அசோகருக்கு இருந்ததாகக் காஷ்மீர் வரலாறு கூறும். தேவிக்குச் சங்கமித்திரை, சாருமதி என்ற இரு பெண்களும் இருந்தனர். சங்கமித்திரை அக்னிப்பிரமனையும், சாருமதி தேவ பால க்ஷத்திரியனையும் பின்னர் மணந்துகொண்டனர். தசரதன், சம்பிரதி, சுமணன் ஆகியோர் அசோகருடைய பெயரர்கள். இவர்களில் சுமணன் சங்கமித்திரையின் மகன்; சம்பிரதி குணாளனுடைய மைந்தன்; தசரதனே பின்னர் மன்னனாயிருந்தவன்.

அசோகர் கி. மு. 274 இல் அரியணை ஏறினார். அவர் சிறுவயதிலிருந்தே அரசர்க்குத் தேவையான கல்வியிலும் கலைகளிலும் நல்ல பயிற்சி பெற்றிருந்தார். 18 ஆண்டுக் காலம் பயிற்சி முடிந்த பிறகு, அவர் சிறந்த போர்வீரராக விளங்கினார். அப்பொழுது பஞ்சாப், காஷ்மீரம் முதலியவை உள்ளிட்ட வடமேற்கு மாநிலத்தின் தலைநகரான தட்சசீலத்தில் சுசீமர் அரசப் பிரதிநிதியாயிருந்தார். அங்கு அரசாங்க அதிகாரிகளின் சில கொடுமைகளை எதிர்த்து மக்கள் கலகம் செய்தனர். சுசீமரால் கலகத்தை அடக்க முடியாததால், பிந்துசாரர் ஒரு படையுடன் அசோகரை அங்கே