பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

செங்கோல் ஓச்சிய அசோகரைப் பற்றிச் சென்ற நூற்றாண்டில்கூட விரிவாகத் தெரிந்து கொள்ள வழியில்லாமலிருந்தது. ஆனால், பின்னர், அவரே எழுதிவைத்த கல் தூண்களும், பாறைகளும் நாடெங்கும் கண்டு பிடிக்கப் பெற்றதால், அவர் ஆட்சியின் பிற்பகுதியைப் பற்றி விரிவாக அறிய முடிந்தது. கல்வெட்டுக்களைக் கண்ட பின்பும், அவற்றில் பொறித்திருந்த செய்திகளையும் புரிந்துகொள்ள நெடுநாளாயிற்று. கல்வெட்டுக்களில் அசோகர் தமது இயற்பெயரான ‘அசோக வர்த்தனர்’ என்று பொறிக்கவில்லை; ‘தேவர் களுக்கு உகந்தவர், பார்வைக்கு இனியவர்’ என்று பொருள்படும் ‘தேவானாம்பிரிய பிரியதரிசி’ என்றே குறித்துள்ளார். பாரசீகப் பெரு மன்னர் தரியஸ் எழுதிவைத்த கல்வெட்டு ஒன்றில் தாமே தமக்குக் கட்டியம் கூறிக்கொள்வது போல, ‘இராசாதி ராசர், (அரசர்க்கரசர்) இராச்சியங்களின் அதிபதி’ என்றும், இன்னார் குமாரரும், இன்னார் பேரருமான மாபெரும் மன்னர் தரியஸ் என்றும் குறித்திருக்கிறார். ஆனால், அசோகரோ பெரும்பாலும் தம் பெயரைக்கூடக் குறிப்பிடவில்லை. ‘சக்கரவர்த்தி’ என்ற சொல்லே அவர் கல்வெட்டுக்களில் காணப்பெறவில்லை. இதிலிருந்து அசோகருடைய அடக்கமும் பண்பும் தெளிவாய்த் தெரிகின்றன.

கதைகள், கல்வெட்டுக்களின் துணை கொண்டு பார்த்தால், அசோகர் பிந்துசாரரின் இராணிகளில் சுபத்திராங்கி என்ற மகாராணியின் மைந்தர் என்றும், வேறு ஓர் இராணியின் மைந்தரான சுமணர் என்பவரே பட்டத்திற்குரிய மூத்தவர் என்றும்,