பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

அசோகரின் பிறவிக் குணங்களாகவே அமைந்திருந்தன என்று கூறலாம். இப்பண்புகளாலேயே அவர் எடுத்த செயல்கள் யாவற்றிலும் வெற்றி மாலை சூடினார். இந்தியாவில் பரந்த நிலப்பரப்பை ஆண்ட பெருமன்னருள் அசோகர் தலைசிறந்தவராக எண்ணப்படுகிறார்.

புவியாளும் மன்னர்க்கு வேண்டிய இன்றியமையாத குணங்கள் காட்சிக்கு எளியவராக இருத்தலும் கடுஞ்சொல் அற்றவராக இருத்தலும் ஆகும். அசோகர் தம் குடிமக்களைத் தம் குழந்தைகளைப் போலப் பாராட்டி என்றும் எளிமையாகவே நடந்து கொண்டார். பொது நன்மையை அன்புமுறையிலேயே வளர்க்க எண்ணிய அசோகர், தம்மைக் கண்டு முறையிட விரும்பும் குடிமக்கள் தம்மை எந்த நேரத்திலும் வந்து காண இசைவளித்தார். “நான் உண்ணுகிறேன்; உறங்குகிறேன் என்று பாராமலும், கொலுமண்டபத்தில் இருக்கிறேன், மாதர்களோடு இருக்கிறேன், தோட்டங்களில் உலவிவருகிறேன் என்று பாராமலும் எல்லா நேரங்களிலும் அரசியல் அலுவலர்கள் நாட்டு நிகழ்ச்சிகளை என்னிடம் கூறவேண்டும்” என்று அவர் ஆணையிட்டிருந்தார். அசோகரின் எளிமைக்கு இதைவிடச் சிறந்த சான்று வேண்டுமோ?

அசோகர் அன்பே உருவமானவர்; ஆற்றிவுள்ள மக்களிடம் காட்டும் அன்பைப் போல ஐயறிவு உடைய உயிர்களிடமும் அவர் அன்பு காட்டினார். விலங்குகளுக்கு நோய்வந்தால் அவற்றுக்கு மருத்துவம் செய்வதற்காகத் தனியே உயர்மருத்துவ நிலையங்களை ஏற்படுத்தினார்; உயிர்களைப் பலியிடும்