பக்கம்:அலைகள்.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


120 இ லா. ச. ராமாமிருதம்

“பாதகமில்லை. அவள் பக்கத்தில் அவன் நெருங்கி னான். அவனது அனல் மூச்சு, அவளுடைய முகத்தைச் சிவக்கச் செய்தது. “உனக்கு என்னைப் பார்த்தால் என் காஷாயம்தானா தெரிகிறது? வேறொன்றும் தெரிய வில்லையா?”

தெரிகிறது, காஷாயம் உமக்கு வேஷமென்று. தயவு செய்து ஒதுங்கும். தனிமையாயிருக்கும் ஒரு ஸ்திரீயிடம் உமக்கு என்ன வேலை?”

  • உன்னிடம்தான் எனக்கு எவ்வளவோ வேலை. உனக்கு இன்னும் புரியவில்லையா? பெண்ணே, எல்லோரையும் போலல்ல நான்-நான்-நான்."”

‘ஐயா, நான் பரஸ்திரீ, பரத்தையல்ல. உம் பேச்சு உம் கோலத்துக்குத் தகாது. தர்ம சாஸ்திரத்துக்குத் தகாது-’’

‘ஒஹோ! தாருகா வனத்தவர்க்குத் தரும சாஸ்திரமு முண்டோ? பெண்ணே ஊடாதே. எதற்கும் சமயாசமய முண்டு-வா-’’

‘அட பாவி-விட்டுவிடடா-என்னைத் தொடாதேதொடாதே-’’

அவளது அலறலைக் கேட்டு, பட்சிகள் பயந்து கதறின; மிருகங்கள் மிரண்டோடின; காற்றும் அஞ்சி அலைந்தது. ஆனால், அவன் செவியில் எது ஏறும்? முகத்தில் வெறி நகைக்க, அவன் அவளைத் தொடர்ந்தான். அவளைத் துரத்தத் துரத்த, வேய்க்காடு, அவர்களைச் சுற்றி அடர்ந்தது.

காட்டின் மத்தியில் ஓங்கி வளர்ந்ததோர் ஆலமரத்தை நோக்கி அவள் ஓடினாள்.

ஒரு பக்கம் ஆத்திரம் பொங்கியெழுந்தது. அவனுடைய கால்கட்டை விரலின் அழுந்த்லில், அஷ்ட குலாசலங்களும் குலையுமே! அவனுடைய ஆற்றொனா ஆற்றலைக் கேவலம் ஒரு பெண் குலைப்பதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/122&oldid=666842" இருந்து மீள்விக்கப்பட்டது