பக்கம்:அலைகள்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மாற்று இ 127

ரேழி விசுப்பலகையில், அரை மயக்கத்தில் கோமதி ஏதோ முனகுகிறாள். அவனறியாது மூச்சு தேம்புகிறது.

துக்கம் மறக்க வந்தோம். இடம் மாறினதால், துக்கம் மறக்க முடிந்ததோ? துக்கத்தினின்று தப்ப முடிந்ததோ? ஏன் முடியவில்லையென்று இப்போ தெரிகிறது. பெற்ற வயிறைத் துக்கம்பட்ட இடத்திலேயே விட்டுவர முடிந்ததோ?

இருந்தாற்போலிருந்து, கண்ட கனவின் மீட்சிபோல் மேலிமையுள், கோலத்தினின்று ஓர் உரு நிமிர்ந்தது. சின்னப் பொம்மையின் சிறுகூடு. உடுத்திய துயவெள்ளையோ டிழைந்த வெள்ளைத் தாழம்பு நிறம். கால், கை, நகங்கள், உதடு, செவிமடிகளின் ரோஜா இதழ்த் திட்டுகள் இவனத் தைப் பறித்தன. கன்னத்தின் பீங்கான் வழுவழுப்பின் கீழ், மாதுளை விதையுள் உறைந்த ரஸ் ஒட்டம்போல் கமழும் ரத்த காந்தி. கழுத்தின் பால்வெளுப்பில் பின்னியோடும் பச்சை நரம்பு.

முகத்தில் புன்னகைகூட இல்லை; ஒரு அமானுஷ்யத் தெளிவு. என் பிம்பமே காணுவேன்போல் நெற்றியில் தனித் துலக்கம், என் ஏக்கத்தில், அப்பார்வை என்மேல் என்று நான் என்னை ஏமாற்றிக் கொள்ளலாமேயன்றி, உண்மை யில் அது எதிலுமே ஊன்றவில்லை. ஆகாசத்திற்கு விழுங்கல் உண்டு, பார்வையேது? பார்க்கப்போனால் நானே அவ்விழி களுள் புகுந்துவிட்டேனா?

உடல் புல்லரித்தது. இனம் தெரியாத வேட்கையில் இதயம் உரிந்தது.

மறுபடியும் காண்பேனா? நாளையும் இன்றுபோல் இருக்குமோ? அமைதியின் வெண் சிறகுகள் திரும்பவும் என் மேல் இறங்குமோ?

‘இன்று நாங்கள் கோவிலில் ஒரு கோலத்தைப் பார்த் தோம்’ என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/129&oldid=666849" இருந்து மீள்விக்கப்பட்டது