பக்கம்:அலைகள்.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மாற்று இ 185

அதுக்குள்ளேயா? அபிதாவுக்கா? பையன் இந்த ஊர்ப் பையன்தான். எங்களுக்குத் தெரிந்த பையன்தான். எட்டிய உறவுகூட கொஞ்சம் பசை யுள்ள இடம்தான். என் தகப்பனாரின் சிரத்தையில்

கைகூடிய சம்பந்தம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இதனால் வாக்குவாதம் கூட.

“நான் நாலுபேர் மாதிரி காசுக்கும் சீருக்கும் ஆசைப் படறேனா?”

‘ஏன், ஆசைப்பட்டுத்தான் பாரேன் !’

இந்த வீட்டில் பிறந்த அந்தப் பெண், இந்த வீட்டை மிதிச்சால் ஆகாதா? ‘ஒஹோ'ன்னு வாயைப் பிளக்க இல்லாவிட்டாலும் ‘ஊஹஅம்’னு உதட்டைப் பிளக்க இல்லாமல், வேப்பிலை உள்ளத்துக்கு வஞ்சனை பண்ண மாட்டாள். நமக்கு ஒண்ணு இருக்கே உங்களுக்குக் கண் அவிஞ்சு போச்சா? அவனைக் கண்டாலே உங்களுக்கு இப்படி வேரோடு வேகனுமா? வேகனுமான்னு கேக்கறேன்?”

குந்தளம், சும்மா அடுக்கிண்டே போகாதே.டீ தாய்ப் பாசம் உனக்குத் தான் கண்ணை மறைக்கிறது. எத்தோடு எது பொருந்தும் என்கிற பகுத்தறிவு நம்மைவிட்டு ஒடிப் போய்விடக் கூடாதடி நாளை நான் உலகத்துக்கு ஜவாப் சொல்லியாகணும். நம் பிள்ளையைப் பற்றிய நம் சண்டை இன்றையச் சண்டையா. நேற்றையச் சண்டையா? கலியான சமயம். நாம் விரதம் பண்ணி தாரை வார்த்துக் கொடுக்கும்வரை ஒற்றுமையாயிருப்போம். ைக ைய ப் பிடித்துக் கொடுத்து, கோத்திரத்தை மாற்றும்வரை தான் வரம் கேட்கிறேன். பிறகு நான் தேவையில்லை. அப்புறம் அப்பளாத்துடன் சேர்த்து என்னையும் நீ பொரிக்கலாம்:

என் தகப்பனார் இருக்காரே-இல்லை இருந்தாரே, அவர் மஹா மஹா-என்ன சொல்வது? தெரியவில்லை. நாக்கு தோற்றுப் போச்சு, அப்படியே விட்டுவிடுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/137&oldid=666857" இருந்து மீள்விக்கப்பட்டது