பக்கம்:அலைகள்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மாற்று இ 145

சைக்கிளுக்கு நிறுத்துக் கூலி ஒரு அணா மேனிக்கு ஒரு கிழமைக்கு என்ன ஆச்சு? இது தவிர பூஜை சாமான் விற்பனை, ஒரு ஒரு விசேஷ தினத்துக்கும் ஐந்து று தேங்காய் செலவழியும். அது வேறே என்னாச்சு?

மலிவு டயம் பார்த்து வாங்கி மட்டையை உரிக்காமல் போட்டு வெச்சா, சமயத்தில் ஒரு வாரு வாரித்துன்னா, மாதச் சம்பளக்காராள் எங்கிட்ட என்ன பண்ணிக்க முடியும்?

பார்க்கப்போனால் கேவலம்

ஒரு தேங்காய்.

2. பூவம்பழம்.

குங்குமம்.

சூடப் பொட்டலம்,

முழம் பூ:

பத்ரம் புஷபம்.

பூஜை சாமான், ஒரு செட்.

என்னவோ உளர்ற மாதிரி இருக்கோ? என்னிடந்தான் இளநீர் மலிஞ்சிருக்கேன்னு வெய்யிலில் புளிக்க வெச்சு நானே குடிச்சுட்ட மாதிரி இருக்கோ அதெல்லாம் இல்லை, பயப்படாதேயும், எதுக்குச் சொல்ல வந்தேன்னா, கோவில் எனக்கு அவசியம் வேணும்; ஆனால் கோவிலுக்குள்ளே நான் போய் வருடக் கணக்காச்சு.

எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ முடிக்கிற மாதிரி இருக்கோ? இல்லவே இல்லை. நான் சரியாத்தானிருக்கேன். நான் என்ன வேப்பிலை மாமியா?

எங்கு விட்டேன்? ஆ! -நினைவு வந்து விட்டது!

மாது ஒருநாள் மத்யானம் தலைவலிக்கிறதென்று நடு வகுப்பில் கேட்டுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிவந்தவன்

- அன்றைக்கென்று பாருங்கள் மாமி வீட்டிலிருந்தாள். ஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம் அடுத்தடுத்து வாந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/147&oldid=666871" இருந்து மீள்விக்கப்பட்டது