பக்கம்:அலைகள்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


150 இ லா. ச. ராமாமிருதம்

தலைக்குப் பின்னால் கைகளைக் கோத்துக் கொண்டு, கண்ணன் மெல்ல மரத்தடியில் சாய்ந்தான். இப்போ ஞாபக மில்லை. கொஞ்சம் கொஞ்சந்தான் ஞாபகமிருக்கு,

மழை ஜோ வென்று கொட்டித்து ராத்திரி.

அம்மா ஒரே தெப்பம். இத்தனை ஈரத்திலும், அவள் அவனை அனைத்துக் கொண்டு, தன் மார்பின் உஷ்ணத்தை அவனுக்கு ஊறவைக்க முயன்றும்-குளிரில் அவனுக்கு தூக்கிப் போட ஆரம்பித்து விட்டது. அதோடு பசி...பசி யான பசி. எவ்வளவுதான் வரவழியெல்லாம் தண்ணி குடிச் சுட்டு இருக்க முடியும்?

கதவு திறந்தது. மாமாவை முதல் முதலாப் பார்த்தது. அப்போத்தான். ஒருகையில் ராந்தலைத் துக்கிப் பிடிச் சுண்டு, இன்னொரு கையை கதவின் மேல் வெச்சுண்டு, பின்னால் இருட்டில் மூஞ்சியை மாத்திரம் நீட்டிண்டு மாமி.

  • அண்ணா.-’’

மாமாவுக்கு முகம் அப்படி மாறுவானேன்? மாமா முழி யைப் பார்க்கறதும் அப்போத்தான் முதல் முதல். மாரிலே ஐஸ் வெச்சாப்போல ஏற்கனவே எனக்கு ரொம்ப குளிர்ரது.

மாமா அப்போ மூஞ்சிக்கு என்ன பண்ணிக்கறா? தெரி பல்லே. என்னமோ முகமூடி போட்டாப் போலே, அன்னிக்கு , டம்பக் கூத்தாடி ஆடினானே அது மாதிரி என்னமோ ஆயிடறது. நெத்தி சுருங்கி, கண்ணும் வாயும் கடுகடுத்து: ஒரு புருவம் இன்னொரு புருவத்து மேலே து க்கிண்டு கோணிண்டு

• அண்ணா!’ -அம்மா குரல் கேக்கவே மாட்டேன் கறிது.

  • யாரு நீயா?”

மாமா உரக்கவே பேசவில்லை. இருந்தாலும் அன்னிக்கு அம்மா பாதி தூக்கி, பாதி நடத்திக் கூட்டி வந்தப்போ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/152&oldid=666878" இருந்து மீள்விக்கப்பட்டது