பக்கம்:அலைகள்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வித்தும் வேறாம்

ரமணியின் நிர்த்துள்ளி நாலு நாளாய்த் தாங்க முடிய வில்லை. ஏற்கெனவே துரு துரு. அதுவும் நாலு நாளாய் வீடு த்வம்ஸம். சுவாமி விளையாட்டாம். எதிர், அண்டைவீட்டு வாண்டுகளை ஜமா சேர்த்துக்கொண்டு ஜாலரா கொட்டுவ தும் எட்டுக் குரலில் பஜனை பண்ணுவதும், மரப்பாச்சியைச் சப்பரம் கட்டித் தூக்குவதும், அவன் அத்தை என் வேட்டி யைப் பட்டை தீட்டி. ஆ ைசியாய் அவனுக்குப் பஞ்சக்கச்சம் வைத்துக் கட்டி, விபூதியைக் கட்டுக் கட்டாய் இட்டு, அவன் உத்ஸவரின் அர்ச்சகனாய், வீட்டுக்கு வீடு தன் படை யைப் பல்லக்குடன் நிறுத்தி, கற்பூரத்தைக் கட்டாயமாய் வாங்கிக் கொளுத்தி, தன்னைக் கொளுத்திக்காமல் இருக் கணுமேன்னு அவன் பாட்டி வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு கத்தி ("இரு பாட்டி! போ, பாட்டி!!") மாலை நான் வந்ததும் என்னிடம் கேஸ் ( இன்னிக்கு உன் பிள்ளை என்ன பண்ணினான்னு கேள், அவனையே கேள்! இவன் காலை முறிச்சிப் போட்டால்தான் கழுத்து மிஞ்சும். அலாதி யாய் உனக்குன்னு வீடு அகப்பட்டு, எங்களைக் கொண்டு வந்து வெச்சிருக்கையே இந்த அத்வானத்திலே! ஒரு கருவேப்பலைக் கொத்துக்கு சைக்கிளைப் போட்டுண்டு ஒட வேண்டியிருக்கு. ஆனால் லாரியும் மோட்டாரும் நிமிஷத் துக்கொண்ணா திக்குத் திக்கு-என் வயிறு திக்திக்-பறக்கற துலே குறைச்சலில்லே, ஏண்டா உனக்கெங்கேடா இப்படி நின்னவிடத்தில் நிக்காமல் தேளாய் பிறந்தது? உனக் கை அழுத்தி அதில் எனக்கு ஒரு ஷொட்டு, நான் காரணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/180&oldid=666932" இருந்து மீள்விக்கப்பட்டது