பக்கம்:அலைகள்.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வித்தும் வேறாம் இ 183

அவள் விழிகள் வழிகின்றன. தலையிலிருந்து கால்வரை மூடித் தரை புரளும் அவ்வெண் ஆடையினின்று அவளுடைய தெனத் தெரிவன அவள் முகமும் கைகளும்தான். பீங்கான் பொம்மை போன்ற அக் கன்னங்களின் வழுவழுப்பைத் தொட்டுப் பார்த்தால் எப்படியிருக்கும்?

எங்கள் மேல் நிமிர்ந்த முகம் கடுகடுக்கின்றது. “படித்த மனுசனாம்! படித்த மனுசன்!!’ தமிழில்தான் சொல்கிறாள்.

நான் என்ன கண்டேன்? சித்தரத்தையிலும் அதிமதுரத் திலும், அம்மாவின் கைராசியிலும் சளி கரைந்து விடாதா என்று தான் நினைத்தேன். ஏழைக்கபம், எங்கள் கபம் எல்லாம் அப்படித்தானே கரைந்தது? லைந்தவியின் கழுத்துச் சங்கிலியை வாங்கிக் கொண்டு அத்தோடுதான் அரை யும் என்றா கண்டோம்?

அதற்கு முந்திய வருடக் கணக்குக் கக்குவான்.

  • புக் புக்’ என்று புகைந்த மூச்சு தொப்புள் வரை யிறங்கி, இன்னும் தாழ என்று உண்டானால் அங்கும் “வொக்கு லொக்கி’க் கொண்டே முழங்குகையில், அத்துடன் நானும் என் நெஞ்சின் பாதாளத்தின் இருள் கிடங்குகளில் மூழ்குகிறேன். என்மேல் இருள் அலைகள் இடிந்து சரி கின்றன. ஆனால் இன்னமும் அதன் தரை தட்டாது சுழன்று கொண்டே செல்லும் குழந்தையின் மூச்சில் தொத்திக் கொண்டு, அந்தரத்தில், மையிருளில் தொங்குகிறேன். நூல் அறுந்தால் நான் கோவிந்தா. ஆனால் நூல் அறவில்லை. தனி சீற்றத்துடன், தாங்காமல் சேத்துப்பட்டைத் தாண்டிச் செல்லும் புகைவண்டியின் ஊதல்போல், பூமியின் அடி வயிற்றினின்று, அதன் வேர்களைப் பிடுங்கிக்கொண்டு மேனோக்கி, என் நெஞ்சை ஆணியால் கிழித்துக்கொண்டே எழும்பிவரும் மூச்சின் க்றீச்சைத் தாங்கமுடியாமல் செவி களைப் பொத்திக்கொள்கிறேன். சதையின் கீழ் வெடித்து
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/185&oldid=666941" இருந்து மீள்விக்கப்பட்டது