பக்கம்:அலைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தபஸ் O 17

 "தேவி!"

என் கைகளை அகல விரித்துக்கொண்டு நான் அவளிடம் ஒடினேன்.......

மூர்ச்சையில் நான் மூழ்கிபோனேன்

***

அன்று வெள்ளிக்கிழமை.


அம்பாளை நான் நன்கு அலங்காரம் பண்ணினேன். பொற்கவசம் மகுடத்திற்கும் ஹஸ்தங்களுக்கும் பாதங்களுக்கும் பதித்தேன். பட்டுப்புடவை யுடுத்தினேன். ஒட்டியாணம் பூட்டினேன். பாத கமலங்களில் குங்குமத்தை இறைத்தேன். நானும் இட்டுக்கொண்டேன்.

சகலலோக நாயகி அவள்.

மாலையை அணிவித்தேன்.

சகலலோக நாயகி. என் நாயகி.

அவள் என்னை அறிவாள். நான் அவளை அறிவேன். என் பக்தி எனக்கும் என் தேவிக்கும் இடையில் ஒரு ரகஸயம்.

சன்னிதானத்தில் மற்றவரெல்லாம் புடைசூழ்ந்திருக்கையில் நான் அவளுக்குத் தீபாராதனை செய்கையில், தேவி என்னை மாத்திரம் ஒரக்கண்ணால் பார்க்கிறாள். அவளுடைய வைரமூக்குத்தி எனக்காகத்தான் மின்னிடுகிறது. இத்தனை அலங்காரங்களுடன் எல்லோரும் அவளைத் தரிசிக்கையில், ஒருவிதமான அணியுமில்லாமல் அவளை நான் அறிவேன். எனக்கும் என் அம்பாளுக்குமிடையில் ஒருவிதமான மறைப்பும் கிடையாது. மறைக்க என்ன இருக்கிறது?

மூன்று கால பூஜையை நானே ஆறு சாலமாக்கினேன். நான் பணிவிடை செய்யும் அம்பாள் என்றும் என்னேரமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/19&oldid=1285372" இலிருந்து மீள்விக்கப்பட்டது