பக்கம்:அலைகள்.pdf/203

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அலைகள்

இடுக் கோடையானாலும் பிற்பகலுக்குமேல் எலும்பு வரை ஒரு சிறு உள் நடுக்கம், சிவப்பு சால்வையைப் போர்த் திக்கொண்டு நாலு மணிக்கே வெய்யில் காய, கடற்கரைக்கு வந்தாகி விடணும். வீடு ரொம்ப கிட்ட அந்த மட்டுக்கும் அவ்வளவு கிட்ட குடி பார்த்ததற்கு நடுப்பிள்ளை மகாராஜன்.

பையன்கள், பள்ளிக்கூடம் விட்டு, காலேஜ் விட்டு, ஆபீஸ்விட்டு மாடினி விட்டு, அவகாசமாய், சேர்ந்தும், தனித்தனியாயும் பின்னால் வருவான்கள். அனேகமாய் அழைத்துப்போகத் தான் வருவான்கள். படகருகே, வலைக் குவியல்மேல் சாய்ந்தபடி, தாத்தா உட்கார்ந்திருக்குமிடம் அவர்களுக்குத் தெரியும்,

அம்மாடி, வெய்யிலின் இதமே! கடலின் தகதகப்பு கண்ணைப் பறிக்கிறது, இப்பவே கண் மட்டுத்தான். ஆனாலும் அதோ அலை உருவாவது தெரிகிறது. வருவதே அலைபார்க்கத் தானே!

முதலில் கடலின் அடி வயிற்றிலிருந்து ஒரு விம்மல், உடனே அதற்கொரு சிகரம். அத்துடன் அது கரை நோக்கி உருண்டு புரண்டு விரையும் ஒரு திரளல். வருகையிலேயே கரையிலிருந்து மீளும் சிற்றலைகள் அத்துடன் விழைந்து திருகும் ஒரு குழையல், சிகரம் உடைந்து வெண் நுரை அலை மீது சரியும் அக்கல். சங்கதி ஏதோ சொல்ல வந்து, வாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/203&oldid=666979" இருந்து மீள்விக்கப்பட்டது