பக்கம்:அலைகள்.pdf/205

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அலைகள் இ 203

வந்த புதிதில் கடும் கோபம்தான் வந்தது. ஆனால் வைவதால், கைகொம்பைத் தூக்கிக்கொண்டு, அவர்களைத் துரத்திக்கொண்டு ஒடுவதால், அவர்கள் சீண்டலும் சிரிப்பும் இன்னும் மீறின. நிச்சயமாய் என் கையில் சிக்கமட்டார்கள் என்று எனக்குத் தெரிகிறது. போகப் போக இன்னொன்றும் தெரிகிறது. அவர்கள் தீங்கற்றவர்கள். நாளடைவில் அவர்கள் இளமையும் சிரிப்பும், சத்தமும் இயற்கையும் இளவெய்யில் போலவே எனககு வேண்டியிருக்கிறது.

“தாத்தா! நண்டு வேணுமா?’’

‘நெத்திலி வேணுமா?’’

  • கெண்டை ஒனுமா?’’

ஒரு குட்டி மற்றவர்களைவிடத் துணிச்சல், கிட்ட வந்து நிற்கிறது, ஒடத் தயாராப் பாவாடைக் கொடுக் கைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, விழிகள் கூத்தாடு கின்றன. ஏதோ முக்யமான ரகஸ்யத்தில் குரலை எல்லோருக்கும் கேட்க்கத் தாழ்த்தி, இமைகளைப் பூச்சி ரக்கைபோல் படபடத்துக் கொண்டு.

“தாத்தா! பெண்டாட்டி ஒனுமா?’’

சிரிப்பு வெடித்து அவர்களிடையில் திகிறி சுற்றி என்னையும் தொத்திக்கொள்கிறது. தேவலை; இந்த அரைப்பட்டினியிலேயே இந்தத் துடுக்கு கண்ணுக்கும் குறுகுறுப்பாய்த் தானிருக்கிறாள். வயதுக்கு நன்றாவே யிருப்பாள். ஆனால் வாய்தான் காதுவரை கிழியும். வாண்டு பாரேன் ‘பெண்டாட்டி வேணுமா வாமே! சிக்காமு இப்போ இங்கிருந்தால் சும்மாயிருப்பாளா? வசை பாடியபடியே துரத்திக் கொண்டு ஒடுவாள்.

‘சிறுக்கி நாக்கையறுக்க! ஏற்கெனவே பிராம்மண னுக்குச் சொல்லவேண்டாம்; நீ வேறே, என்ன வரம் வேணு"முனு கேக்கறையா?”

“ஐயோ பாட்டி, உனக்கு நாட்டுப் பெண்கள் வந் தாச்சு; நாங்கள் பேரப்பிள்ளைகளும் வந்தாச் சு: இன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/205&oldid=666982" இருந்து மீள்விக்கப்பட்டது