பக்கம்:அலைகள்.pdf/255

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


'தெறிகள்’ இ 253

பகல் பந்திகள் ஓய்ந்தன. “கிருஷ்ண கானம் ஆரம்பிக்க இருக்கிறது. யாருக்கு யோசனை தோன்றிற்றோ தெரிய வில்லை. அந்த கிருஷ்ண வேஷக் குழந்தையை முன்னால் உட்கார வையுங்களேன்!”

குழந்தையைக் காணோம். ஒரு நிமிஷத்தில் கலவரம் தெருவைப் பற்றிக் கொண்டது.

“ஐயையோ!’ புதிதாய் ஒரு அலறல் புழக்கடையி லிருந்து கேட்டு எல்லோரும் அலறிப் புடைத்துக்கொண்டு ஓடினோம்.

நான் அங்கு போய்ச் சேரக்கூடவில்லை. சேரவேண்டிய அவசியமேயில்லை. கைகள் வெலவெலத்து விட்டன. கிணற்றையொட்டி, எட்டுக் குதிரைகளுக்கு ஒரே சமயத்தில் தண்ணீர் காட்டும் அளவுக்குக் கட்டிய சிமெட்டித் தொட்டி, யின் விளிம்பிலிருந்து ஒரு மயிலிறகு எட்டிப் பார்த்தது.

“கிறிச் சென்ற ஒரு கத்தல், செட்டியாரின் அரண்மனை யைத் துருவிற்று. குழந்தைக்குச் சொந்தக்காரி.

1 ஐயோ பெத்தவளுக்கு என்ன பதில்சொல்வேன்!” அதைக் கேட்டதும் அதன் அர்த்தம் என் மண்டையுள் தோய்ந்ததும், உடல் முழுவதும் பயங்கரமாய் மின்சாரம் தெறித்தது.

குழந்தையைத் தோற்றவள் குழந்தைக்குத் தாயென்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தவள், குழந்தைக்குத் தாயில்லை. தான் சொன்னபடி குழந்தையைத் தன் இடுப் புக்கு அணியாய்க் கொண்டு வந்தவள்தான்.

எனக்கு விழிப்பு வந்தபோது பொலபொலவென்று பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. வண்டியில் எதிர் “வசீட்"டில் ஒரு ஸ்திரீ, அவளுடைய முழந்தையைத் தவிர வோடியாாமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/255&oldid=667079" இருந்து மீள்விக்கப்பட்டது