பக்கம்:அலைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குண்டலி O 39

 அவள் குரலில் அழுகை துளும்பிற்று.

"என்ன மன்னி?"

தலையைத் திருப்பிக்கொண்டாள்.

நான் சமாதானம் பண்ண முயன்றேன்.

“ஒருத்தரும் ஒன்றைக் கெடுக்க முடியாது. அது உள்ள படியேதான் இருக்கிறது. ஒண்ணு ஒன்பது ஆவது ஒன்பது ஒராயிரம் ஆவது எண்ணங்கள்தான். ஆகையால் ஒன்று என்கிற எண்ணம்தான் கெடுபடுகிறது.”

எண்ணம் முக்கியம் இல்லையா? உண்டு-இல்லை. பண்ணுவதே அதுதானே!"

‘எண்ணுவதற்கு எண்ணேயில்லை. எண்ணுவதைவிட உள்ளதே முக்கியம்; அப்பப்போ உள்ளது. அதைச் சுற்றிச் சுற்றித் தான் எண்ணம்.”

"எண்ணம் இல்லாததையும்தான் சுற்றுகிறது", அவள் குரலில் படர்ந்த பகை லேசாய்க் கசந்தது.

"என்னண்ணா மன்னியும் நீயும் பேசறேள்?’’

வண்டியின் அறைகூவல் துரத்திலிருந்து நெருங்கிக் கொண்டே வந்து, நெஞ்சைக் கிழித்தது. சோம்பல் முறித்த வண்ணம் எழுந்தேன்.

“குண்டலி!"

“குண்டலியா? அது யார்? பேரே புதுவிதமாய்-"

நான் ஒன்றும் பேசவில்லை, அவள் முகம் கறுத்தது. குழந்தையைத் துக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு விடு விடென உள்ளே சென்றாள்.

வண்டி நெருங்கிவிட்டது.

நான் ஸ்டேஷனுக்குக் கிளம்பினேன்.

***

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/41&oldid=1285566" இலிருந்து மீள்விக்கப்பட்டது