பக்கம்:அலைகள்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90 இ லா. ச. ராமாமிருதம்

விமலா, நாம் ஊருக்குப் போகணும்.” “என்னைச் சீண்டாமல் இருங்களேன். அழுகைகூட வரு கிறது. வருஷம் கழித்துத் தொலை தூரத்திலிருந்து வந்திருக் கிறோம்; ஒரு வாரமாவது...’

‘விமலா விமலா! நாம் போயிடலாம்'நீங்கள் வேனுமானால் போங்கள்: நான் இருந்து பின் னால் வருகிறேன்.”

‘இல்லை; நீ இப்போது என்னருகில் இல்லாமல் நான் இருக்க முடியாது’

“கொஞ்சம் மட்டுக் கட்டிக் கொள்ளுங்கள்! நாளைக்குக் கொஞ்சம் வேண்டாமா?’’

‘இது பிரியம் இல்லை; இது அவசியம். பிராணனின் மூச்சு மாதிரி.”

‘ என்னவோ பேசறேவோ? பயமாயிருக்கே! ஒண்ணுமே புரியல்லியே? திடீர்னு என்ன நேர்ந்துவிட்டது?’’

“ஏதோ மறந்து போனது, மறந்து போனதாக நான் நினைத்துக் கொண்டது நினைப்பு வந்துவிட்டது.”

“என்னது? ஆபிஸில் தப்புத்தண்டா பண்ணிவிட் டேளா?’’

“முக்கியமாய், ரகஸ்யமாய், பொறுப்பாய்ப் பூட்டி வைக்கவேண்டிய பேப்பர் ஒன்று வெளியில் இருக்கிறதோ என்று பயம் வந்துவிட்டது.”

‘பொய் சொல்கிறீர்கள்!” “ஆமாம்; பொய் சொல்கிறேன்.” “இதென்ன! அடிவயிற்றில் புளியைக் கரைக்கிற விளை யாட்டு! நிஜத்தைச் சொல்லுங்கோளேன்: -

“நிஜம் சொல்கிறேன்.” * எது நிஜம்:”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/92&oldid=667266" இருந்து மீள்விக்கப்பட்டது