பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ❖ லா. ச. ராமாமிர்தம்

ஸிரிகாந்த், ஷேகர் சித்தப்பா வேறே இருக்கா. அப்புறம்
சின்னி அக்கா-ஸிரிகாந்த் யமஹா பைக் வெச்சிருக்கான்.
அப்பா பஜாஜ் ஸ்கூட்டர்!”

பாப்பாவை இழுத்து அணைத்துக் கொண்டாள்.
‘வண்டி எல்லாம் கோர்வையா சொல்லத் தெரியறது.
குழந்தையேயில்லை, பாட்டிதான்!’

பாப்பூ இருந்தாற் போல் இருந்து, அவள் கன்னத்தில்
தன் முகத்தைப் பதித்த மூர்க்கத்தில் பாப்பூ மூக்கு சப்பை
ஆயிற்று.

“இது கட்டி முத்தா மெட்றாஸ் போனதும் தாத்தா
வுக்கும் ஸிரிகாந்துக்கும் கொடுப்பேன்.”

வஸூ மூர்ச்சையானாள்.

குழம்பைக் கிளறிக் கொண்டிருந்த கை சட்டென
தடைப்பட்டு நின்றது. மேலிருந்து அடிமேல் அடிவைத்துக்
கள்ளன் போல் வரும் ஒசை. “ஹம்”மிங். அபாரமான குரல்.
கையைப் பற்றி இழுப்பது போன்று அடுப்பை மறந்து,
மாடிப்படியண்டை வந்து நின்றாள்.

‘ஹம்’மிங். நகரும் மேகம் சிதறிக்கிடக்கும் சின்ன மேகச்
சிதர்களை விழுங்குவது போல அது அவளை விழுங்கியது.
ஒடிப் போனவளைப் பாடுகிறான். ஜோதி. சட்டென ஒரு
ஞாபகம் வந்தது. கல்யாணத்துக்குப் பாட்டுக் கற்றுக்
கொள்ளும் அந்த நாளில் பாட்டு வாத்தியார் ஒரு கீர்த்தனை
சொல்லிக் கொடுத்தார். பாட்டு எப்பவோ அடியோடு
மறந்து போயாச்சு. ஆனால் ராகத்தின் பெயர் மட்டும்
நினைவில் சிக்கிக் கொண்டது. ஜோதிஸ்வரூபிணி. அவள்
பெயர் அதுவாயிருக்குமா? தன் பெயரை மாற்றிக்கொண்
டாற் போல அவள் பேரையும் மாற்றினானா, இல்லை இது
என் குதர்க்க புத்தியா? அசலாக அவளுக்கும் சங்கீதத்துக்கும்