பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ❖ லா. ச. ராமாமிர்தம்

எக்கச்சக்கமாகி சிகிச்சையில் கோளாறோ, அஜாக்ரதையோ
செப்டிக் ஆகி கணிசமாய் எடுத்துவிடும்படி ஆகிவிட்டது.
இத்தனைக்கும் நான் டாக்டர், கைநிறைய-இல்லை கை
வழியச் சம்பாதிக்கறேன். என்ன பிரயோஜனம். தாது
இருந்தும் நபும்சகன். வேடிக்கை? எப்படி?”

ஸ்வேதா சிரித்தான். ஆனால் முயன்ற சிரிப்பு, அதன்
உருட்டுகள் ஏறும் தாறுமாய், செயற்கையாய், கட்டியும்
முட்டியுமாய் உதிர்ந்தன. ஸ்வேதாவுக்கு வேர்த்துக் கொட்டி
யிருந்தது.

“வ்யாஸ், வஸூவுக்கு குழந்தைகள்னா ரொம்பப்
பிடிக்கும். எட்டு சோதரி சோதரர்களிடையே பிறந்தவள்.
ஸர்வரக்ஷகத்தின் சிரிப்புணர்வு வினோதமாயில்லை?
ஆச்சு, இது நடந்து பத்து வருஷமாறது. வஸூவுக்கு அந்த
விஷயத்தில் ரொம்பப் பெருந்தன்மை. வ்யாஸ், நம்
பெண்டிர், கோவிலில் வைத்துக் கும்பிட வேண்டியவர்கள்.
அதனால்தான் அவர்களை, அம்பாள், ஜகன்மாதாவின்
ஸ்வரூபம் என்கிறோம். வஸ்வின் ஆதரவும் ஆதாரமும்
இல்லாவிட்டால் எப்பவோ அதோகதியாகியிருப்பேன். என்
சிலுவையையும் சேர்த்து அவள் தாங்குகிறாள்.”

“சரி, தத்து ஒண்ணு ரெண்டு எடுத்துக்கலாமா?
எண்ணம் தோணாமல் இல்லை. உறவிலும் கிடைக்கும்,
அனாதைக் குழந்தை இல்லங்களும் இருக்கின்றன. ஆனால்
இருக்கிற வலி போதாமல், திருகுவலியை விலைக்கு
வாங்கிண்ட மாதிரி ஆனால்? மனம் ஏனோ கூசறது.
எதிலுமே ரிஸ்க் ஃபேக்டர் இருக்கு. ஆனாலும் தத்து குழந்தை
பெத்த குழந்தையாகுமா? இடையே தொப்புள்கொடியைத்
துண்டித்துத்தானே தாயையும் சேயையுமே பிரித்தாகிறது.
இயற்கையின் நியதியே அப்படி.

நாங்கள் நடத்தும் வாழ்க்கை-இது நார்மலா?
உஷ்-வஸூ, சும்மாயிரு. நான் சொல்வதைச் சொல்லியே