பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ❖ லா. ச. ராமாமிர்தம்

யிருப்பேன். அப்போல்லாம் ஒண்ணுமில்லே. இப்போ
இடுப்பிலே மொத்தினதா உனக்கு யமனா வாய்ச்சுட்டுது!
எனக்கு விளங்கவேயில்லையே!,br>

கண்கள் மிளகாய்ப் பழமாக எரிந்தன. ஆனா ஒரு
சொட்டுக் கண்ணிர் கூட வல்லே. வர மறுத்துவிட்டது.
அத்தினியும் வரண்டு போச்சு. உடம்பு திகுதிகுவென
எரிந்தது. ம்ஹும் கண்ணீரைக் காணோம். உடல் பூரா
எரிச்சல் தாங்க முடியவில்லை.

அவளைத் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள்.
அவனும் மகனும் மருமகளும் கூடப் போனார்கள். அதிக
மாக அழுகை கூட இல்லே. அழுவதற்கு ஆளில்லை.
அவனால் அங்கு சூழ்ந்து கொண்ட பயம், கழனிக் காட்டின்
நடுவே பொரியும் மண்ணில் சிதை எரிவதைப் பார்க்கக்கூட
ஆட்கள் நிற்கவில்லை. நழுவி விட்டார்கள்.

அவனும் மகளும் மருமகளும் மாத்ரம். அவள் பஸ்ட
மாவதைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

அங்கெல்லாம் இம்மாதிரி விஷயங்களைப் பெரிசு
படுத்தமாட்டார்கள். முதலில் மலையடிவாரத்தில் குக்
கிராமம். இப்படி நேர்வதெல்லாம் அபூர்வம். போலிஸ்
விசாரணை இம்மாதிரி வந்து அடிக்கடி துன்புறுத்தலுக்குப்
பழக்கப்படாதவர்கள். பயம். பொதுவாகவே கிழவன்
மேல் யாருக்குமே ஆத்திரம், குரோதம் கிடையாது. அவன்
சுபாவத்துலே நல்லவன்தான். முன்கோபம் கொஞ்சம்
ஜாஸ்தி ஒப்புக்க வேண்டியது. ஆனால் இதுவரை பெரிய
தப்புத்தண்டா நடந்ததில்லை. இப்படி நடந்தது அவனுடைய
போறாத வேளைன்னுதான் சொல்லணும். அதுக்கு அவனே
அனுபவிக்கப் போறான். நாம் ஏன் வம்பு சேர்க்கணும்.
மகன் தங்கமான பையன். மருமகள் அதுக்கு மேலே
நல்லவள். ரெண்டு பேருமே நல்லாப் பாத்துக்குவாங்க