பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 & லா. ச. ராமாமிர்தம்

விழுதுகள் தொங்கின. ஓரிரண்டு பூமியில் ஊன்றியும் விட்டன. ஒரு கோடைமழை. அதன் மேல் மின்னல் விழும் போது பார்த்துவிட்டாள். கிளை விழுந்த ராக்ஷஸத் தீக்கோடு வெட்டினதும், மரம் பற்றிக்கொண்டு இரண்டாய்ப் பிளந்து ஒரு பகுதி எரிந்தபடியே சாய்ந்தது. கம்பீர சோகம். ஒரு விபரீத கவித்வம். மின்னல் என்றால் லேசா? இந்திராஸ்த்ரம் அல்லவா? வீழ்ச்சி என்றால் இப்படித்தான் வீழ்தல் வேண்டும். என்ன பேத்தறேன்?

அந்த ராக்ஷஸக் கொழுந்தும் புகைமண்டலமும் வானளாவின. ஊரே வேடிக்கை பார்த்தது. அடுத்த நாள் பூரா எரிந்தது. கிளைகளின் சந்துகளில் நெருப்பு சீறிற்று. ‘உஷ்’ என்று இரைந்தது. அனலில் அவர்கள் வீட்டுச் சுவர்கள் சுட்டன. திண்ணைக் கொதிப்பு உட்கார முடிய வில்லை. உள்ளே ஏதோ ஒன்று பீதி புகைந்தது. இது நல்லதற் கில்லை.

இதுவே இப்படி ஆனால், கண்ணகியின் கோபம் எப்படியிருந்திருக்கும்? கற்பு பற்றியெரிவதென்றால் இது போல்தானிருக்குமா? கீதா சுலபமாகச் சொல்லிவிட்டாள். எப்படிச் சொன்னாள்? வாயில் வந்து விட்டது. அப்படித் தானே?

ஆண்டாள் நாச்சியார் இதுபோல ஜோதியில்தானே கடைசியாகக் கலந்திருப்பாள்? No, அது குளுமையான ஜோதி. ஆனால் தடாதகை ஹோம குண்டத்தில் தானே தோன்றினாள்? பாஞ்சாலியும் அப்படித்தானே? அஞ்சு பேருக்கும் பத்தினி.

“ராமா, இவள் கற்பின் நெருப்பு என்னைத் தஹிக்கிறது. தாங்க முடியவில்லை. இவளைப் பெற்றுக் கொள்:” என்றானே அக்னி பகவான், அது என்ன நெருப்பு? இந்தப்