பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெத்தென்று ஒரு முத்தம் * 187

புராணக் கதைகளே சமயத்தில் புரியறதில்லே. நியாயங்கள் ஒண்ணுக்கொண்னு முரணா- .

கோமதி, குருட்டு யோசனைகளிலிருந்து மனமின்றி மீண்டாள்.

இருள் நன்றாவே கனத்து விட்டது. வானத்தில் அங்கு மிங்குமாய்ச் சாம்பல் கலுக்குகள் சில. மருதாணி மரம், மொத்தாகாரமாய் அதன் வடிவக் கோடுகளை மட்டும் விட்டுக் கொண்டிருந்தது. இலைகளினிடைச் சந்தினின்று ஒரு மினுக், மினுக் திருட்டுத்தனமா எட்டிப் பார்த்தது.

“ஏ கோமதி, ஏடி இப்படி இந்தப் பக்கம் பார். நான் தெரியறேனா?”

“உனக்கென்னடிம்மா, நீ நrத்ரம், உன் பதவியிலிருந்து கேக்கறே. நான் வெறும் கோமதி.”

‘நீ அப்படி நினைக்கறே. உண்மையில் நாங்கள் அநாம தேயங்கள். அத்தனையும் இரைஞ்சு கிடக்கும் மணல் கற்கள். நீயானும் கோமதி.”

விட்டுத்தள்ளு. இந்த சம்பாஷணையைத் தொடரப் பிடிக்கல்லே. சம்பாஷணையா இது? என் ஆற்றாமை. பெருமூச்செறிந்தாள்.

விளக்கைப் போட எழுந்திருக்க மனமில்லை. இந்த இருளில் சுகம், ஆதரவு. பத்ரம் கமழ்ந்தது.

அறைக்கதவு மெதுவாய்ச் சிறுகச் சிறுக, அதன் க்றீச் கூட அத்தனை அடக்கமாய்.

&கீதிfr po

A whisper. அடிகள் நெருங்கி, நாற்காலிக்குப் பின்னால் நின்றன.