பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 : லா. ச. ராமாமிர்தம்

“கீதா, நீ தனியாக் கிடைக்க மாட்டாயான்னு எப்படி ஏங்கிப் போயிட்டேன் தெரியுமா? எனக்கு, எனக்கு மட்டும் நீ கீதா, என் இதயராணி.”

சிரிப்பைக் கோமதி கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்

“உன்னிடம் என் இதயத்தைத் திறந்து சொல்ல எவ்வளவோ இருக்கிறது. இந்த ஜன்மம் போதாது. அதன் ஆரம்பம் இந்த ஜன்மம் இல்லை-அதற்கும் முன்னால், கீதா!-கீதா!-நான்-நான்-”

சட்டென்று அவள் பின்னாலிருந்து குனிந்து, இடது கன்னத்தில் ஒரு முத்தம் விழுந்தது. வந்தவனுக்கு உடனேயே தப்பு தெரிந்துவிட்டது.

“My God!”

ஒடினான்.

மாடிப்படிகளில் அடிகள் தட தட

கோமதி அவள் இடத்தில் விறைத்துப் போனாள். முத்தம் என்னவோ மொக்கு மாதிரித்தான் மெத்தென்று ஒத்திற்று. ஆனால் கன்னம் தீய்ந்தது. கால் கட்டை விரலிலிருந்து மண்டை உச்சி வரை அந்த மின்தாக்கல் தனக்குத் தானே இல்லாமல் போய்விடுவாள் போல.

எழுந்து விளக்கைப் போட்டாள். கண்ணாடியெதிரில், இடது கன்னத்தைத் தேய்த்துக் கொண்டு நின்றாள். அந்தப் பயங்கர பரவசம் முற்றிலும் தணியவில்லை. ஆனால் வடிய ஆரம்பித்து, உணர்வு படிப்படியாக மீண்டது.

இடது கன்னம் பூரா, தார் ஊற்றினாற்போல், தடித்த மறு. அதில் ஒன்றிரண்டு மயிர்கள் முளைத்திருந்தன.