பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 & லா. ச. ராமாமிர்தம்

வாங்கோ’ (டாக்டர் இது என்ன உங்கள் நல்ல எண்ணமா? கேட்கவில்லை)

Check-upக்குப் போகும் போதெல்லாம் “எல்லாம் நார்மல்”. டாக்டர் அடித்துச் சொல்லிக் கொண்டே ஐந்து வருடங்களாய் (எச்சரிக்கையாம்!) மாத்திரைகள் விழுங்கிக் கொண்டிருக்கிறேன். இப்பவும் பால் ஏடையும் விழுங்கிக் கொண்டிருக்கிறேன். என்ன ருசி! என்ன ருசி!!

உயிர் மேல் ஆசையெனில், உடலுக்கு மறுக்க வேண்டும். இது அபத்தமான கூற்றாய் இல்லை? உடல் இல்லாமல் உயிர் எப்படி வாழ முடியும்? உயிரற்றுப் போனால், உடல் சிதைக்கன்றி மற்றெதற்கு?

சபலம்தான் உண்மையான ஆட்கொல்லி, மனத்தின் சீரழிவு. ஆனால் அதற்குத்தான் கடைசி வெற்றி. ஆயிரம் பத்தியமிருந்தாலும் சாவிலிருந்து பத்திரம் ஆகிவிட முடியுமா? ஆறிலும் சாவு, நூறிலும் சாவு, பாலேடைத் தின்றே சாகிறேனே!

ஆயுள் என்பதே என்ன, கூடிணம் கூடிணமாய் கூடிணத் தின் நீட்டல்தானே! ஆகவே உன் கூடிணத்தை வாழ் எனும் கண்ணனின் தத்துவம் பித்து, பொறுப்பற்றது என்று சொல்வதற்குண்டோ?

பாலைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பருகி அனுபவித்துக் கொண்டே, கண்ணனின் நடமாட்டத்தைக் கவனிக்கிறேன். மேஜை அண்டை உட்கார்ந்து கடிதங்கள் எழுதிக் கொண் டிருக்கிறான். அவனுக்கு நிறைய நண்பர்கள். ஆகவே நிறையக் கடிதங்கள். அப்புறம் புத்தகங்கள் படிப்பான். அப்புறம் பசிக்கும் மூலைப் பழையதைப் பிழிந்து கலத்தில் வைத்துக் கொண்டு தின்பான். அவனுக்கு விட்டுவிட்டு அடிக்கடி பசிவேளை. அகாலங்கள் அவனைப் பாதிப்ப தில்லை.