பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்மன் & 223

பக்கம் திரும்பிற்று தெரியவில்லை. சாதாரணமாக சிற்றப்பா அப்படி எல்லாம் பேசுவதில்லை.

“ராமகிருஷ்ணர் அம்பாளை எப்படிக் கண்டார் தெரியுமா? அவருக்கு முதன் முதலாகத் தெரிந்தது மூக்குத்தி இருட்டில் திடீரென்று பிதுங்கிக் கொண்டு அது மட்டும் தனி ப்ரகாசமாய்

சித்தப்பா குரலில் ஏதோ சக்தி வந்துவிட்டது. இல்லாட்டா-இல்லாட்டா

எனக்கும் சுற்று முற்று நினைவு திடீரென்று அற்றுப் போய் ஏதோ குரல் மட்டும் ஸ்ருதி போல் தூரத்தில் என்னைச் சூழ்ந்த மையிருட்டில் அதோ. ஒ. ஒ. து. ஊ. ஊ.ரத்தில் ஒரு க்ளாவர் நீலப்பொறியாய் ஆரம்பித்து கிட்ட நெருங்க அந்த ஒளிவீச்சு பெரிதாகிக் கொண்டே வந்து என்னைத் தன்னுடன் சுருட்டுகையில் என் உடம்பில் ஏதோ ஜிவ்வென்று கிளம்பி மண்டைக்கு கிர்-ர்-ர்-ர்-ர். என் கடைசி நினைப்பு அந்த திகுதிகுக்கும் மூக்குத்தி யுடன் மடேரென்று விழுந்துவிட்டேன். முகத்தில் தண்ணிர் தெளித்து எழுப்பினார்கள்.

இதில் என்ன இருக்கிறது என்று கேட்போருமுளர். அது கேட்போரின் உரிமை, அவரவர் தன்மை, பாகுபாடு, சமயத்துடன் ஈடுபாட்டைப் பொறுத்தது.

வயதுக்கு வந்த பின்னரும் சில அபூர்வமான நேரங் களில் இதுமாதிரி அவசங்கள் எனக்கு நேர்ந்திருக்கின்றன. ஆனால் அவைகளைப் பற்றி நான் பேசப் போவதில்லை. முதலில் தற்புகழ்ச்சியாய் தோன்றக்கூடும். திருப்பிச் சொல் வதனாலேயே அவைகளின் நளினம் அலர்ந்துபோம். இம் மாதிரி சமயங்களுக்கெல்லாம் சாr சம்மன் கிடையாது. எனக்கு நான்தான் சாr. நான்கூட இல்லை. சுயநினைப்